Anirudh - Kavya Maran : அடேங்கப்பா... கிரீஸில் நடைபெற்ற அனிருத் - காவ்யா மாறன் திருமண செலவு இத்தனை கோடியா?

Published : Nov 14, 2026, 11:25 AM IST

Anirudh - Kavya Maran Wedding Cost : அனிருத் - காவ்யா மாறன் திருமணம் கிரீஸ் நாட்டில் நடைபெற்ற நிலையில், அவர்களின் திருமண செலவு குறித்த தகவல் இணையத்தில் வைரலாகிறது.

PREV
14
அனிருத் - காவ்யா மாறன் திருமணம்

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். தனது தனித்துவமான இசையால் ரசிகர்களைக் கவர்ந்துள்ள இவர், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிப் படங்களிலும் பணியாற்றி வருகிறார். இவரது இசையில் வெளியான பல பாடல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்நிலையில், அனிருத் திருமணம் பற்றிய பேச்சுக்கள் தான் தற்போது கோலிவுட்டில் ஹாட் டாப்பிக் ஆக உள்ளது.

அனிருத்தும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் நிர்வாகியுமான காவ்யா மாறனும் கடந்த சில ஆண்டுகளாகக் காதலித்து வருவதாகக் கூறப்பட்டு வந்தது. இருவரும் ஒன்றாக வெளிநாடுகளுக்குச் சென்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி கவனம் பெற்றன. இந்தச் சூழலில், இருவரும் திருமண வாழ்க்கையில் இணைந்து தங்கள் காதலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

24
கிரீஸில் நடைபெற்ற திருமணம்!

கடந்த நவம்பர் 11ந் தேதி அன்று கிரீஸ் நாட்டில் அனிருத் – காவ்யா மாறன் திருமணம் நடைபெற்றது. இந்தத் திருமணம் காலை 11:11 மணியளவில் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே பங்கேற்கும் வகையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் குடும்பத்தினர் மற்றும் தமிழக முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் குடும்பத்தினர் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் திருமணத்தில் கலந்துகொண்டனர்.

34
திருமணத்திற்காக இத்தனை கோடி செலவா?

இந்தத் திருமணம் குறித்துப் பேசப்படுவதைவிட, அதற்காகச் செய்யப்பட்ட செலவுகள் தற்போது இணையத்தில் அதிக கவனத்தைப் பெற்றுள்ளன. திருமண ஏற்பாடுகளுக்காக மொத்தம் ரூ.100 கோடிக்கும் அதிகமாகச் செலவிடப்பட்டதாக ஒரு தகவல் பரவி வருகிறது. அதிலும், விருந்தினர்களின் விமானப் பயணம் உள்ளிட்ட போக்குவரத்து ஏற்பாடுகளுக்காக மட்டும் மொத்தச் செலவில் சுமார் 50 சதவீதம் ஒதுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மொத்தம் நான்கு விமானங்களில் சென்னையில் இருந்து விருந்தினர்கள் அழைத்துச் செல்லப்பட்டார்களாம்.

அனிருத் - காவ்யா மாறன் திருமணம் கிரீஸில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் வைத்து நடைபெற்றது. கடற்கரை ஓரம் அமைந்துள்ள இந்த அழகிய ஹோட்டலில் சகல வசதியும் உள்ளதாம். இங்கு அதிகபட்சமாக ஒரு ரூமின் விலை ஓர் இரவுக்கு ரூ.11 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

44
சென்னையில் திருமண வரவேற்பு

அனிருத் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராகத் தொடர்ந்து பல பெரிய படங்களில் பணியாற்றி வருகிறார். மறுபுறம், காவ்யா மாறன் கிரிக்கெட் ரசிகர்களிடையே பிரபலமான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் நிர்வாகப் பொறுப்பில் இருந்து வருகிறார்.

இருவரும் பல ஆண்டுகளாகக் காதலித்து வருவதாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது அவர்கள் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். திரையுலகைச் சேர்ந்த பிரபலங்களும் அரசியல் பிரமுகர்களும் இந்த ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். வருகிற நவம்பர் 21ந் தேதி இந்த ஜோடியின் பிரம்மாண்டமான திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற உள்ளது. அதில் திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகளும் கலந்துகொள்ள உள்ளனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories