Andrea as Mermaid : இளசுகளின் கனவுக்கன்னியா இருந்த ஆண்ட்ரியா... இப்போ கடல்கன்னியா மாறிட்டாங்க - ஏன் தெரியுமா?

Ganesh A   | Asianet News
Published : Jan 07, 2022, 08:48 AM ISTUpdated : Jan 07, 2022, 08:50 AM IST

நடிப்பைப் போல் பாடகியாகவும் திரையுலகில் ஜொலித்து வருகிறார் ஆண்ட்ரியா. அண்மையில் புஷ்பா படத்திற்காக இவர் பாடிய ‘ஓ சொல்றியா மாமா’ பாடல் பட்டிதொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது.

PREV
15
Andrea as Mermaid : இளசுகளின் கனவுக்கன்னியா இருந்த ஆண்ட்ரியா... இப்போ கடல்கன்னியா மாறிட்டாங்க - ஏன் தெரியுமா?

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆண்ட்ரியா. “ஆயிரத்தில் ஒருவன்”, “மங்காத்தா“, “சகுனி“, “இது நம்ம ஆளு” போன்ற பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் தரமணி படம் அவருக்கு ஏராளமான ரசிகர்களையும், நல்ல பெயரையும் பெற்றுத்தந்தது. அதன் மூலம் கமலுடன் “விஸ்வரூபம்” படத்தின் முதலாவது மற்றும் 2ம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். 

25

பின்னர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் உடன் ஆண்ட்ரியா நடித்த வடசென்னை திரைப்படம் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. இடையில் இசையமைப்பாளர் அனிருத் உடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகின. அதில் அனிருத், ஆண்ட்ரியா லிப் -லாக் காட்சிகள் இடம் பெற்று சர்ச்சையை கிளப்பியது. இது ஒருபுறம் இருந்தாலும் சினிமாவில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார் ஆண்ட்ரியா.

35

நடிப்பைப் போல் பாடகியாகவும் திரையுலகில் ஜொலித்து வருகிறார் ஆண்ட்ரியா. அண்மையில் புஷ்பா படத்திற்காக இவர் பாடிய ‘ஓ சொல்றியா மாமா’ பாடல் பட்டிதொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது. இவர் கைவசம் மிஸ்கினி பிசாசு 2 படம் உள்ளது. இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

45

இந்நிலையில், நடிகை ஆண்ட்ரியா தற்போது ஒரு பேண்டஸி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். துப்பாக்கி முனை படத்தின் இயக்குனர் தினேஷ் செல்வராஜ் இயக்கும் இப்படத்தில், நடிகை ஆண்ட்ரியா கடல் கன்னியாக நடித்து வருகிறார். நடிகை ஆண்ட்ரியா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கடல் கன்னி கெட் அப்பில் போட்டோஷூட் நடத்தி இருந்தார். அதைப்பார்த்து அவரை இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர். மேலும் சுனைனா, முனீஸ்காந்த் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

55

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இதற்காக தி-நகரில் 50 லட்சம் ரூபாய் மதிப்பில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். அடுத்தமாதம் ஷூட்டிங்கை முழுவதுமாக முடித்து படத்தை கோடை விடுமுறைக்கு திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்திற்கு பிரபல ஒளிப்பதிவாளர் பால சுப்ரமணியெம் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

Read more Photos on
click me!

Recommended Stories