பிரபல செய்தி ஊடகங்களில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர் திவ்யா துரைசாமி. இவர் செய்தி வாசிப்பதை காண்பதற்கு என ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே காத்துக்கிடந்தது.
கடந்த ஆண்டு ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்த இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற படத்தில் திவ்யா துரைசாமி சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதன்பின்னர் தொலைக்காட்சி மற்றும் விருது நிகழ்ச்சிகளில் என பிசியாக வலம் வந்த திவ்யா துரைசாமி தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
ஏற்கனவே செய்திவாசிப்பாளரான பிரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவின் இளம் நடிகையாக தற்போது வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில், அடுத்து திவ்யா துரைசாமியும் களம் இறங்கியுள்ளார்.
இன்னும் பெயரிப்படாத அந்த படத்தில் ஜெய்க்கு ஜோடியாக திவ்யா துரைசாமி நடிக்க உள்ளாராம்.
கொரோனா காலத்தில் கிராமத்தில் நடக்கும் சுவாராஸ்ய சம்பவங்களை கொண்டு கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.