HBD DD : பிறந்தநாள் ஸ்பெஷல்! சின்னத்திரையில் சிங்கப்பெண்ணாய் மிளிரும் டிடி-யின் ஹாட் மற்றும் கியூட் போட்டோஸ்

Ganesh A   | Asianet News
Published : Feb 17, 2022, 01:51 PM ISTUpdated : Feb 17, 2022, 01:54 PM IST

தொகுப்பாளினி டிடி இன்று தனது 37-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்களும், பிரபலங்களும் சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

PREV
18
HBD DD : பிறந்தநாள் ஸ்பெஷல்! சின்னத்திரையில் சிங்கப்பெண்ணாய் மிளிரும் டிடி-யின் ஹாட் மற்றும் கியூட் போட்டோஸ்

விஜய் டி.வி.யின் பிரபல தொகுப்பாளியாக வலம் வருபவர் திவ்யதர்ஷினி (Dhivya Dharshini). க்யூட்டான ஸ்மைல், கலகலப்பான பேச்சால் கவரப்பட்ட ரசிகர்கள் இவரை செல்லமாக டிடி என அழைக்கின்றனர்.

28

இவரது சகோதரி ப்ரியதர்ஷினியும் தொகுப்பாளியாக உள்ளார். திவ்ய தர்ஷினி (Dhivya Dharshini) விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான  ஏராளமான  நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

38

இவற்றில் பெரும்பாலானவை சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தவை. “ஜோடி நம்பர்1”,“சூப்பர் சிங்கர்”, “காபி வித் த டிடி”, “ஹோம் ஸ்வீட் ஹோம்” போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். 

48

தனது நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை காதலித்து கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணமான சில மாதங்களுக்குள் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். 

58

அதன் பின்னர் டி.வி. நிகழ்ச்சிகளில் முழு கவனம் செலுத்தி வரும் டிடி (DD), சினிமாவில் அவ்வப்போது வெயிட்டான கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.

68

அந்த வகையில் கவுதம் மேனன் (Gautham Menon) இயக்கியுள்ள துருவ நட்சத்திரம் மற்றும் ஜோஷ்வா இமைபோல் காக்க ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் டிடி. இந்த இரண்டு படங்களும் விரைவில் ரிலீசாக உள்ளன.

78

மேலும் சில பட வாய்ப்புகளை கைப்பற்ற அவ்வப்போது... விதவிதமாக போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் டிடி (DD).

88

தொகுப்பாளினி டிடி இன்று தனது 37-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்களும், பிரபலங்களும் சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

click me!

Recommended Stories