களைகட்டிய அன்புமணி ராமதாஸ் மகள் திருமண வரவேற்பு! நேரில் வாழ்த்திய அரசியல்வாதிகள் மற்றும் திரை பிரபலங்கள்!

Published : Sep 15, 2021, 01:23 PM ISTUpdated : Sep 15, 2021, 01:57 PM IST

பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் மகள் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி, சென்னையில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது இதில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் மு.க.ஸ்டாலின், கவர்னர் தமிழிசை, நடிகர் சிவகார்த்திகேயன், சந்தானம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர். இதுகுறித்த சிறு புகைப்பட தொகுப்பு இதோ...   

PREV
17
களைகட்டிய அன்புமணி ராமதாஸ் மகள் திருமண வரவேற்பு! நேரில் வாழ்த்திய அரசியல்வாதிகள் மற்றும் திரை பிரபலங்கள்!

பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் - சவுமியா ஆகியோரின் மகள் சங்கமித்ராவுக்கும், ஷங்கர் பாலாஜி என்பவருக்கும்  சென்னையில் கடந்த 1ம் தேதி திருமணம் மிக பிரமாண்டமாக நடைபெற்றது.
 

27

திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டதால், மிக பிரமாண்டமான திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு, நேற்று நடந்தது.
 

37
anbumani ramdoss

இதில் கலந்து கொள்ள, தமிழக அரசியல்வாதிகள் மற்றும் திரைபிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. குறிப்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழக முதல்வர் முக ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
 

47
anbumani ramdoss

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தர ராஜனும் இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தார். தற்போது இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.
 

57
anbumani ramdoss

நடிகர் சிவகார்த்திகேயன் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் மகள் சங்கமித்ரா மற்றும் ஷங்கர் பாலாஜி தம்பதிகளை வாழ்த்த வருகை தந்த காட்சி.

67

மிகவும் எளிமையாக வந்த சிவகார்த்திகேயன், மணமக்களை வாழ்த்தினார். மேலும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு திருமண வரவேற்பை சிறப்பித்தனர்.
 

77

பூரித்த புன்னகையோடு ராமதாஸ் ஐயாவோடு, சந்தானம்... அவரது பேத்தி திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்து வாழ்த்திய போது எடுத்து கொண்ட புகைப்படம்.

click me!

Recommended Stories