காதலில் விழுந்து 5 ஆண்டுகள் ஆனாலும், கோலிவுட் வட்டாரத்தில் எப்போதுமே நயன்தாரா, விக்னேஷ் சிவன் காதல் சங்கதி ஹாட் டாப்பிக்காக வலம் வந்து கொண்டு தான் இருக்கிறது.
அவ்வப்போது காதலி நயனுடன் இருக்கும் புகைப்படங்களை வேறு பகிர்ந்து முரட்டு சிங்கிள்களை வெறுப்பேற்றி வருகிறார். இதுவரை காதலில் மட்டும் இணைந்திருந்த விக்கி - நயன் புதிய தொழில் ஒன்றிலும் இறங்கியிருப்பது அனைவரும் அறிந்த செய்தி.
சினிமாவில் நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தாமல் நயன்தாரா, காதலர் விக்னேஷ் சிவனின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு மற்றும் விநியோக வேலைகளிலும் ஆர்வமாக பங்கேற்று வருகிறார்.
மேலும் தற்போது நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் சேர்ந்து சாய் வாலா நிறுவனத்தில் ரூ. 5 கோடி முதலீடு செய்திருக்கிறார்கள் என்று தகவல் வெளியாகின. நயன் ரியல் எஸ்டேட் பிசினஸிலும் முதலீடு செய்துள்ளதாக செய்தி.
இப்படி மற்ற துறையில் பிசியாக இருந்தாலும், காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தையும் விக்னேஷ் சிவன் இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தை முடித்த கையேடு, நயன்தாராவும், அட்லீ - ஷாருகான் இணையும் படத்தின் படப்பிடிப்பில் பூனேவில் கலந்து கொண்டதாக தகவல் வெளியானது.
nayanthara
எந்த ஒரு விஷேஷம் என்றாலும், தன்னுடைய சொந்த ஊரான கொச்சிக்கு பறந்து போய்விடும் நயன்தாரா. இம்முறை தன்னுடைய அம்மா பிறந்தநாளை சொந்த ஊரில் சிறப்பாக கொண்டாடியுள்ளார்.
இதுகுறித்த புகைப்படத்தை வெளியிட்டு, வாழ்த்து தெரிவித்துள்ளார் விக்னேஷ் சிவன். இந்த அப்புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.