Theatre and OTT Releases : அன்பே டயானா முதல் அருள்வான் வரை... ஜூலை 17ல் தியேட்டர் & ஓடிடியில் செம ட்ரீட் வெயிட்டிங்

Published : Jul 13, 2026, 01:41 PM IST

This Week Theatre and OTT Releases : சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ முதல் அருள்நிதியின் அருள்வான் வரை... இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி-யில் ரசிகர்களைக் கவர பல சுவாரஸ்யமான திரைப்படங்கள் வரிசைகட்டி காத்திருக்கின்றன.

PREV
17
Theatre Release Movies

அன்பே டயானா

தமிழ் சினிமாவில் இந்த வாரம் ஏராளமான படங்கள் திரைக்கு வருகின்றன. அதில் ஒரு படம் தான் அன்பே டயானா. இப்படத்தை பாரி இளவழகன் இயக்கி உள்ளார். இவர் இதற்கு முன்னர் ஜமா என்கிற படத்தை இயக்கி இருந்தார். இப்படத்தில் பாரி இளவழகன் தான் ஹீரோவாகவும் நடித்துள்ளார். மேலும் பரிதாபங்கள் கோபி, நடிகை ரம்யா ரங்கநாதன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் ஜூலை 17ந் தேதி திரைக்கு வருகிறது.

27
அருள்வான்

அருள்நிதி ஹீரோவாக நடித்துள்ள படம் அருள்வான். இப்படத்தை கணேஷ் விநாயகன் இயக்கி உள்ளார். இவர் இதற்கு முன்னர் தேன், தகராறு போன்ற படங்களை இயக்கி இருக்கிறார். இப்படத்தில் அருள்நிதி உடன் ரம்யா பாண்டியன், ஆரவ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படமும் ஜூலை 17-ந் தேதி ரிலீஸ் ஆகிறது.

37
GDN

இந்தியாவின் எடிசன் என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற விஞ்ஞானியான ஜிடி நாயுடுவின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம் தான் GDN. இப்படத்தை கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இப்படத்தில் மாதவன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் துஷாரா விஜயன், சத்யராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படமும் ஜூலை 17ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

47
அர்ஜுனர் பேர் பத்து

யோகிபாபு கதையின் நாயகனாக நடித்துள்ள படம் தான் அர்ஜுனர் பேர் பத்து. இப்படத்தை ராஜ்மோகன் இயக்கி உள்ளார். இப்படத்தில் யோகிபாபு உடன் காளி வெங்கட், அனாமிகா, அருள்தாஸ், லெனின் பாரதி ஆகியோர் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ள இப்படம் ஜூலை 17-ந் தேதி திரை காண உள்ளது.

57
இந்த வார ஓடிடி வெளியீடுகள்

சினிமா மற்றும் வெப் சீரிஸ் ரசிகர்களுக்கு இந்த வாரம் ஓடிடி-யில் பல அட்டகாசமான படைப்புகள் காத்திருக்கின்றன. தமிழ் டேட்டிங் ரியாலிட்டி ஷோ முதல் ஹாலிவுட் ஆக்‌ஷன் ஹாரர் படங்கள் வரை, க்ரைம் டிராமா முதல் கொரிய காதல் தொடர்கள் வரை பல புதிய டைட்டில்கள் வெளியாகின்றன.

ஜியோஹாட்ஸ்டார்

ஜியோஹாட்ஸ்டாரில் இந்த வாரம் பல ரிலீஸ்கள் உள்ளன. ரம்யா கிருஷ்ணன் வழங்கும் ‘செகண்ட் லவ்’ டேட்டிங் ஷோ ஜூலை 13ந் தேதி முதல் ஸ்ட்ரீம் ஆகிறது. இதுதவிர, சமந்தாவின் ஆக்‌ஷன் படமான ‘எங்கள் தங்கம்’ ஜூலை 17ந் தேதி ஸ்ட்ரீம் ஆக உள்ளது. ஜேக்கப் எலோர்டி நடிக்கும் ‘வுதரிங் ஹைட்ஸ்’ ஜூலை 13ந் தேதியும் ‘ரெடி ஆர் நாட் 2: ஹியர் ஐ கம்’ ஜூலை 16ந் தேதியும் வெளியாகின்றன.

67
நெட்ஃப்ளிக்ஸ்

நெட்ஃப்ளிக்ஸில் வில் ஃபெரலின் ‘தி ஹாக்’ காமெடி சீரிஸ் ஜூலை 16 முதல் ஸ்ட்ரீம் ஆகிறது, பேய்களைப் பார்க்கும் ஹீரோயினின் கொரியன் டிராமா ‘ஸ்பூக்கி இன் லவ்’ ஜூலை 18ல் ரிலீஸ் ஆகிறது, மத்திய தரைக்கடலில் அகதிகளைக் காப்பாற்றும் இளைஞர்களின் உண்மைக்கதையான ‘23,000 லைவ்ஸ்’ ஜூலை 17ந் தேதி ஸ்ட்ரீம் ஆக உள்ளது. இதுதவிர ‘ஹார்ட்ஸ்டாப்பர் ஃபாரெவர்’ ஜூலை 17ல் ரிலீஸ் ஆகுது.

77
ப்ரைம் வீடியோ

ப்ரைம் வீடியோவில் இந்த வாரம், கொலை முயற்சியில் இருந்து தப்பிக்கும் பெண்களின் ஆக்‌ஷன் காமெடியான ‘ரைடு ஆர் டை’ ஜூலை 15ல் ரிலீஸ் ஆகின்றது. ‘ரெட்ஹெட் மர்டர்ஸ்’ வழக்கை விசாரிக்கும் ‘மர்டர் 101’ டாக்குமென்டரி ஜூலை 13ந் தேதியும், நிகிதின் தீர் நடிக்கும் க்ரைம் டிராமா ‘ரக்தாஞ்சல் 3’ ஜூலை 16ந் தேதியும் ரிலீஸ் ஆகின்றன.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories