அமலா பால் வாழ்க்கையை திருப்பிப்போட்ட கோவா ட்ரிப்... ஜோதிடரால் நடந்த மேஜிக்..!

Published : Feb 27, 2026, 01:53 PM IST

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அமலா பால். இவர் தற்போது இரண்டாவது திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். இவரின் வாழ்க்கையை திருப்பிப் போட்ட தருணம் பற்றி பேசியுள்ளார்.

PREV
14
Amala Paul unexpected love

நடிகை அமலா பால் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த ஒரு தரமான சம்பவத்தை பற்றி பேசியுள்ளார். 'வாழ்க்கை ஒரு முழு நீள கமர்ஷியல் சினிமா மாதிரி. எப்போது, எங்கே, என்ன திருப்பம் வரும் என்று யாருக்கும் தெரியாது. என் வாழ்க்கையில் நடந்த இந்த சம்பவத்தைக் கேட்டால் நீங்கள் நிச்சயம் அதிர்ச்சி அடைவீர்கள்' எனக்கூறிய அவர் அந்த சம்பவத்தை விவரித்துள்ளார்.

சில வருடங்களுக்கு முன்பு ஒரு ஜோதிடர் என் கையைப் பார்த்து, "உனக்கு 32 வயதில் திருமணம் உறுதியாகும்" என்று கணித்துக் கூறினார். அன்று அவர் சொன்னதைக் கேட்டு என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. ஏனென்றால், அந்த நேரத்தில் எனக்கு ஒரு காதலன் கூட இல்லை! "நானே சிங்கிளாக இருக்கிறேன், திருமணத்திற்கு எங்கிருந்து பையன் வருவான்?" என்று நினைத்து அந்த ஜோதிடரின் பேச்சை அங்கேயே மறந்துவிட்டேன்.

24
மறக்க முடியாத கோவா பயணம்

ஆனால் தலைவிதி என்பது மிகவும் சக்தி வாய்ந்தது அல்லவா? சில நாட்களுக்குப் பிறகு, மனதை புத்துணர்ச்சியாக்க நான் 'கோவா' சுற்றுலா சென்றிருந்தேன். அங்கு கடல் அலைகளுக்கு மத்தியில் எனக்கு 'ஜகத்' என்ற அற்புதமான நபரின் அறிமுகம் கிடைத்தது. முதல் பார்வையிலேயே ஏதோ ஒரு மேஜிக் நிகழ்ந்தது போல இருந்தது. எங்கள் இருவருக்கும் இடையே நட்பு வளர்ந்து, அது டேட்டிங்கிற்கு வழிவகுத்தது. கோவாவின் அந்த அழகான சூழலில் எங்கள் காதல் மலர்ந்தது.

34
திருமணத்துக்கு முன்பே கர்ப்பம்

காலப்போக்கில் நான் எதிர்பாராத விதமாக கர்ப்பமானேன். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், எனக்குத் திருமணம் செய்துகொள்ளும் திட்டம் எதுவும் இல்லை. வாழ்க்கையை இப்படியே என்ஜாய் செய்யலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் கர்ப்பம் தரித்த விஷயம் தெரிந்த பிறகு, எங்கள் உறவுக்கு ஒரு அதிகாரப்பூர்வ முத்திரை குத்த வேண்டும் என்று முடிவு செய்தோம். ஜகத்தும் மிகவும் பொறுப்பாக நடந்துகொண்டார். இறுதியில் நாங்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தோம்.

44
ஆச்சரியத்தில் அமலா பால்

இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், என் திருமணம் உறுதியானபோது எனக்குச் சரியாக 32 வயது! அன்று அந்த ஜோதிடர் சொன்ன வார்த்தை அப்படியே உண்மையானது. நம்பினால் நம்புங்கள், இல்லையென்றால் விட்டுவிடுங்கள், சில நேரங்களில் வாழ்க்கை நமக்கும் முன்பே திட்டமிட்டிருக்கும் என்பதற்கு இதுவே சாட்சி. இப்போது நான் ஜகத்துடன் மகிழ்ச்சியாக இருக்கிறேன். மொத்தத்தில், கோவா பயணம் என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது! நம்பவே முடியாத ஒரு சம்பவம் என் வாழ்வில் நடந்துள்ளது. ஆனால், இந்த விஷயத்தை முன்கூட்டியே கணித்துச் சொன்ன அந்த ஜோதிடரின் மீது எனக்கு உண்மையிலேயே ஆச்சரியமும் மரியாதையும் ஏற்பட்டுள்ளது' என்று கூறியுள்ளார் நடிகை அமலா பால்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories