பிறகு தமிழ், மலையாளம், கன்னடம் என அனைத்து மொழி படங்களிலும் நடிக்க துவங்கியவர் முன்னணி கதாநாயகிகள் போலவே தனக்கான கதைக்களத்தை தேர்ந்தெடுக்க ஆரம்பித்தார். அதன்படி இவர் நடித்த அம்மா கணக்கு படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று இருந்தது. இதை தொடர்ந்து ஆடை படத்தில் வித்யாசமான தோற்றத்தில் இவர் நடித்து விமர்சனங்களை வாங்கி கட்டிக் கொண்டார்.
மேலும் செய்திகளுக்கு...தெலுங்கு கற்றுக்கொள்ளும் சிவகார்த்திகேயன்..ஓன் வாய்ஸில் தான் டப்பிங்காம்...
தற்போது ஆடு ஜீவிதம், ஆசிரியர் என்னும் என்னும் மலையாள படங்களில் நடித்து வரும் அமலபால் நடித்துள்ள அதோ அந்த பறவை போல படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. ஆக்ஷன் நாடகமான இதை அறிமுக இயக்குனர் கே ஆர் வினோத் இயக்கியுள்ளார். இந்தப் படம் ஆகஸ்ட் 26 ஆம் தேதி திரைக்கானும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செஞ்சுரி பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படம் காட்டில் சிக்கிக் கொள்ளும் ஒரு பெண் அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.