திரையுலகில் தனக்கு மிகப்பெரிய திருப்புனைய ஏற்படுத்தும் என நடிகை ஹன்சிகா எதிர்பார்த்து காத்திருந்த திரைப்படம் மஹா. இந்த படத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர், சிம்புவுடனும் ஜோடி சேர்ந்து சில காட்சிகளில் நடித்திருந்தார்.
மேலும் எப்போதும் திரையரங்கில் வெளியாகும் படங்கள் ஒரு மாதத்திற்கு பிறகே, திரையரங்கில் ரிலீஸ் ஆகும் என கூறப்பட்ட நிலையில், ஹன்சிகா படம் படு தோல்வியை சந்தித்ததால் ஒரு மாதத்திற்கு முன்னதாகவே ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
பப்பி நாயகியாக இருந்த போது, விஜய், தனுஷ் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்ட ஹன்சிகா ஸ்லிம் பிட் நாயகியாக மாறியபின்னர் அப்படி எந்த வாய்ப்பும் கிடைக்காமல் அல்லாடி வருகிறார்.
அந்த வகையில் தற்போது... ஹன்சிகா பார்பி பொம்மை போல் கியூட்டான குட்டை கவுனில் தன்னுடைய கால் அழகை வெளிப்படுத்தி வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் இளம் ரசிகர்கள் மனதை குளிர வைத்துள்ளது.
விரைவில் அரசியல்வாதி மகன் ஒருவரை ஹன்சிகா திருமணம் செய்ய உள்ளதாக கூறப்பட்ட நிலையில், இதுகுறித்து எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாக வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.