Tamannaah Bhatia: ஸ்கின் கலர் உடையில்... நச்சுனு இருக்கும் ஸ்டக்ச்சர்!! டாப் அங்கிள் போஸில் சூடேற்றிய தமன்னா!

விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை தமன்னா (Tamannaah Bhatia)... ஸ்கின் கலர் உடையில், செம்ம ஸ்டைலிஷ் அண்ட் ஹாட் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு இளசுகளை சூடேற்றியுள்ளார். அந்த புகைப்படங்கள் இதோ...

தெலுங்கு, இந்தி சினிமாவில் ஒரு ரவுண்ட் வந்த தமன்னா. தமிழில் அஜித், விஜய் உட்பட முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் ஜோடி போட்டுவிட்டார். அதேபோல் பவன் கல்யாண், மகேஷ்பாபு, அல்லு அர்ஜுன், நாகசைதன்யா, ஜூனியர் என்.டி.ஆர் எனப் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துவிட்டார்.

பாகுபலி படத்தில் தமன்னா நடித்த அவந்திகா கேரக்டர் அவரது கேரியரையே மாற்றும் படமாக அமைந்தது. சமீபத்தில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தமன்னா நடிப்பில் வெளியான நவம்பர் ஸ்டோரி வெப் தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.


ஹோம்லி, கிளாமர் என இரண்டையும் கலந்து கட்டி என்ன தான் நவரசத்தையும் வெளிப்படுத்தினாலும் தமன்னாவிற்கு தற்போது பட வாய்ப்புகள் அமையவில்லை. இடையில் வேறு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மிகவும் உடல் எடை குறைந்து காணப்பட்டார். 

சமீபத்தில் தெலுங்கில் ஒளிபரப்பான மாஸ்டர் செப் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த தமன்னா, நிகழ்ச்சியாளர்களுடன் ஏற்பட்ட திடீர் கருத்து வேறுபாடு காரணமாக நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிப்பதிலேயே அதிக கவனம் செலுத்தி வரும் இவர், அவ்வப்போது விதவிதமான போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களையும் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில் தற்போது ஸ்கின் கலர் உடையில்,.. தன்னுடைய உடலுக்கு ஏற்றவாறு மாடர்ன் டிரஸ் அணிந்து இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Latest Videos

click me!