பிரபல கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே, கடந்த ஆண்டு செப்டம்பர் 10 ஆம் தேதி தன்னுடைய நீண்டநாள் காதலர் சாம் பாம்பே என்பவரை குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மிகவும் எளிமையான முறையிலேயே இவர்களுடைய திருமணம் நடந்தது.
திருமணம் ஆன கையேடு... கணவருடன் திருமண கோலத்தில் உள்ள புகைப்படங்களை வெளியிட்டு தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார். திருமணத்திற்கு பின்னர், கணவருடன் ஹனி மூன் சென்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை கிளுகிளுக்க செய்தார்.
திருமணமாகி இரண்டு வாரம் கூட ஆகாத நிலையில், கணவர் சாம் பாம்பே தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும், பாலியல் ரீதியாக கொடுமை படுத்தியதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இது பூனம் பாண்டேவின் ரசிகர்ளை அதிர்ச்சியடைய வைத்தது. இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் சாம்மை கைது செய்தனர். முதலில் கணவருடன் சேர்ந்து வாழ மறுத்து பேசிய பூனம் பின்னர், இதெல்லாம் திருமண வாழ்க்கையில் சகஜம் என கூறி... கணவருடன் சமாதானமாக சென்று வாழ துவங்கினார்.
தற்போது இவர்களுடைய கணவன் மனைவி பிரச்சனை மீண்டும் சந்திக்கு வந்துள்ளது. பூனம் பாண்டே கண், முகம் ஆகிய இடங்களில் படுகாயத்துடன் மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவரை கொடூரமாக தாக்கிய காரணத்திற்காக, தற்போது... அவரது கணவர் சாம் பாம்பேவை போலீசார் மும்பை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் என்ன காரணத்திற்காக இவர்களுக்குள் பிரச்சனை எழுந்தது என்பது குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.
பூனம் பாண்டேவுக்கு தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவரது கணவரிடமும் ஒரு புறம் விசாரணை சென்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தற்போது பாலிவுட் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.