பாடல் போட்டு சிரிக்க வைக்கும்.. டிரெண்டிங் ஹீரோ அலெக்ஸ் யாரு தெரியுமா?

Published : Jan 22, 2026, 01:37 PM IST

அலெக்ஸாண்டர் பாபு, காமெடி, இசை, மற்றும் கதைசொல்லல் ஆகியவற்றை இணைக்கும் 'மியூசிக்கல் ஸ்டாண்ட்-அப்' பாணிக்காக அறியப்பட்ட ஒரு தனித்துவமான தமிழ் ஸ்டாண்ட்-அப் காமெடியன். இவரைப்பற்றி யாருக்கும் தெரியாத தகவல்களை காண்போம்.

PREV
14
அலெக்ஸாண்டர் பாபு யார் தெரியுமா?

அலெக்ஸாண்டர் ஸ்டாண்ட் அப் காமெடி-ன்னு (Alexander stand up comedy) சொன்னா தமிழ்நாட்டு மக்களுக்கு அதிகம் அறிமுகம் தேவையில்லைனு என்று கூறலாம். இவர் ஒரு சாதாரண ஸ்டாண்ட்-அப் காமெடியன் மட்டும் இல்ல. காமெடி + இசை + ஸ்டோரிடெல்லிங் மூன்றையும் கலக்கும் “மியூசிக்கல் ஸ்டாண்ட்-அப்” என்ற தனி அடையாளத்தை உருவாக்கியவர் தான் அலெக்ஸ்.

யார் இந்த Alexander?

அலெக்ஸாண்டர், தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தில் பிறந்தார். ஆரம்ப வாழ்க்கை கிராமப்புற சூழல், கல்வி, பின்னர் பெரிய நகர கனவுகள் என ஒரு “ரியலான” பின்புலம் இவருக்கு இருக்கிறது. இதே பின்புலம் தான் இவரின் காமெடியிலும் தெரியும். இவர் ஒரு காமெடியன், நடிகர், யூடியூபர், இசைக்கலைஞர், யோகா ஆசிரியர் என்று பல முகங்கள் கொண்டவர் என அதிகாரப்பூர்வமாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.

24
இன்ஜினியரிங் முதல் ஸ்டேஜ் வரை

இவரின் வாழ்க்கையில் சுவாரஸ்யமான ட்விஸ்ட் என்னன்னா, இவர் முதலில் மென்பொருள் பொறியாளர் ஆக பணிபுரிந்தவர். அமெரிக்காவில் உயர் படிப்பு முடிச்சு, அங்க வேலை செய்த அனுபவமும் இருக்கிறது. பின்னர் 2014-ல், இந்த நிறுவன தொழில்-ஐ விட்டு முழுநேரமாக காமெடிக்கு வந்தார். “Ex(hausted) engineer”ன்னு இவர் தன்னை சொல்லிக் கொடுக்கிறார் கூட இவரின் பிராண்டிங் ஸ்டைல். இதுதான் இவரை மற்ற காமெடியன்களிடமிருந்து வேறுபடுத்தும் முதல் பாய்ண்ட் ஆகும்.

அலெக்ஸாண்டர் ஸ்டாண்ட் அப் காமெடி

அலெக்ஸாண்டரின் காமெடி “one-liner” மட்டும் இல்ல. இவர் கதை சொல்லும் நகைச்சுவை ரொம்ப ஸ்ட்ராங். அதோடு பெரிய ஹைலைட் என்னனா, இவர் காமெடியை இசையோட mix பண்ணுவார். அதாவது காமெடி பேசிக்கொண்டே பாடுவார், இசை வைத்து punch build பண்ணுவார், சில நேரம் கேரக்டர் மாறி மாறி நடித்தும் காட்டுவார். இதை “Musical Stand-up Comedy”ன்னு சொல்லலாம். அதனால்தான் இவரின் நிகழ்ச்சிகள் நம்ம தமிழ் ஆடியன்ஸ்க்கு “கதை கேட்கிற மாதிரி” உணர்வு கொடுக்கும்.

34
பிரபலமான ஷோஸ்

அலெக்சாண்டரின் கரியரில் மிக பெரிய பெயர் எடுத்த ஷோ "அலெக்ஸ் இன் வொண்டர்லேண்ட்". இது ஒரு English-Tamil musical stand-up special ஆக உருவானது. இந்த ஷோ உலகம் முழுக்க பல நாடுகளில் நிகழ்த்தப்பட்டது. பின்னர் Amazon Prime Video-லவும் special-ஆஸ்ட்ரீம் ஆனது. இதுக்கு அடுத்ததாக அவர் உருவாக்கிய அடுத்த பெரிய லைவ் ஷோ “Alexperience”. இதுவும் பெரிய ஹிட்.

பாடல் காமெடி ஸ்டாண்ட் அப்

அலெக்சாண்டரின் காமெடி பல நேரம் “நாமே பேசுற மாதிரி” இருக்கும். கிராமத்தில் இருந்து நகரம், வெளிநாடு வாழ்க்கை, தமிழ் கலாச்சாரம், குடும்பம், நடுத்தர வர்க்க மனநிலை, வேலை அழுத்தம், சமூக பழக்கங்கள் என பல விஷயங்களை அவர் லைட்டா காமெடியாக சொல்வார். இதனால் இளைஞர்கள் மட்டுமில்லாமல் குடும்ப ஆடியன்ஸும் கனெக்ட் ஆகுறாங்க.

44
நடிகர், பாடகர் என்ற அடையாளம்

அலெக்சாண்டர் பாபு ஸ்டேஜ் மட்டும் இல்ல, சினிமாவிலும் வந்திருக்கிறார். உதாரணத்துக்கு, மாதவன் நடித்த மாறா படத்தில் நடித்துள்ளார். மேலும் அமேசான் பிரைமில் வந்த Time Enna Boss web series-லவும் அவர் நடித்துள்ளார். இதனால் தான் அவரை “stand-up comedian”ன்னு மட்டும் சொல்ல முடியாது, multi-talented performerன்னு சொல்லலாம். அவர் பாடல்கள் பெரிசா நீளமா இருக்காது. ஒரு சின்ன tune-ல், daily problems-ஐ காமெடியாக மாற்றி, அதையே punch-ஆ முடிப்பார். இது stand-up-ல ஒரு freshness கொடுக்குது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories