அவதூறு பரப்பிய யூடியூப் சேனல்... 500 கோடி நஷ்டஈடு கேட்டு அதிர்ச்சி கொடுத்த சூப்பர் ஸ்டார் பட நடிகர்..!

First Published | Nov 20, 2020, 11:48 AM IST

பிரபல வில்லன் நடிகர், தவறான செய்தியை பரப்பிய யூடியூப் சேனல் நிர்வகித்து வரும் நபர் மீது 500 கோடி நஷ்ட ஈடு கேட்டு, வழக்கு தொடர்ந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

பாலிவுட் திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான அக்ஷய் குமார் தான், இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.
இவர் தமிழில், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக வெளியான ’2.0’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தவர்.
Tap to resize

மேலும் காஞ்சனா படத்தின் ஹிந்தி ரீமேக்காக ராகவா லாரன்ஸ் இயக்கிய ’லட்சுமி’ படத்திலும் இவர் ஹீரோவாக நடித்திருந்தார்.
இந்த நிலையில் அக்ஷய் குமார் பீகாரை சேர்ந்த யூடியூப் சேனல் நடத்தி வரும் ஒருவரிடம் ரூபாய் 500 கோடி நஷ்ட ஈடு கேட்டு சட்டபூர்வமாக நோட்டீஸ் அனுப்பி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
சுஷாந்த்சிங் கொலை வழக்கு குறித்து பீகாரை சேர்ந்த ரஷித் சித்திக் என்ற வாலிபர் தனது யூடியூப் சேனலில் ஆதாரம் இல்லாத செய்திகளை தெரிவித்து வந்ததாக கூறப்பட்டது.
மேலும் ரஷித் சித்திக் தனது செயலுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் மூன்று நாட்களுக்குள் இந்த நோட்டீசுக்கு பதில் அளிக்காவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அக்ஷய் குமாரின் நோட்டீஸில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
ஏற்கனவே ரஷித் சித்திக் மீது மகாராஷ்டிரா மந்திரி ஒருவரை அவதூறாக பேசியதாக மும்பை போலீசார் வழக்கு செய்துள்ள நிலையில் தற்போது அக்ஷய் குமாரும் நோட்டீஸ் அனுப்பி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இனியாவது சமூக ஊடகங்களில் செய்திகளை வெளியிடுவதில் அதீத விழிப்புடன் உண்மையான தகவலை வெளியிட வேண்டும் என பலர் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

Latest Videos

click me!