விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு எப்போதும் தனி ரசிகர்கள் பட்டாளம். பல கொரியன் தொடரை டப் செய்து வரும் தொலைக்காட்சிக்கு மத்தியில் “கிருஷ்ணகோலி’’ என்ற வங்காள சீரியலை தழுவி இந்த சீரியல் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த தொடரில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் ரோஷினி. மாடல் அழகியான இவர் சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்து அதில் வெற்றியும் கண்டுவிட்டார்.
சமீபத்தில் கர்ப்பிணியான கண்ணம்மா வீட்டை விட்டு விரட்டப்பட்டு கையில் பையுடன் ரோடு ரோடாக சுற்றும் காட்சிகள் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டது. இதனால் கடுப்பான ரசிகர்கள் மீம்ஸ் போட்டு கலைத்தனர். ஆனால் அந்த மீம்ஸ்கள் அனைத்தும் வேற லெவலுக்கு ட்ரெண்டாகி சீரியலையும் ரோஷினியையும் மேலும் பிரபலமடைய வைத்தது.
தற்போது தைரியமான பெண்ணாக தனது குழந்தையை வளர்க்க போராடும் கண்ணம்மாவின் கதாபாத்திரம் இல்லத்தரசிகளை வெகுவாக கவர, சீரியலும் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கிறது.
சோசியல் மீடியாவில் எப்போது ஆக்டிவாக இருக்கும் ரோஷினி தனது மாடலிங் போட்டோஸ்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.
நம்ம கண்ணம்மாவா இது? என ரசிகர்களே வாய்பிளக்கும் அளவிற்கு ரோஷினி பகிரும் மார்டன் லுக் போட்டோஸ் வைரலாகி வருகிறது.
அப்படி இருக்க தற்போது திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாராவுடன் ரோஷினி எடுத்துக்கொண்ட செல்ஃபி போட்டோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் நயன் தனது பிறந்தநாளை கொண்டாடினார். அதனால் இந்த போட்டோவும் லைக்குகளை குவித்து வருகிறது.