அடுத்த பைக் ரெய்டுக்கு பக்கா பிளான் போட்ட அஜித்! எங்கெல்லாம் போகிறார்? வெளியானது ரீசென்ட் போட்டோஸ்..!

First Published Sep 24, 2021, 4:45 PM IST

பைக் ரைடிங் பிரியரான தல அஜித் (AjithKumar), தற்போது உலகம் முழுவதும் பைக்கில் வலம் வந்த, மாரல் யார்சலூவுடன் (Maral Yazarloo) எடுத்து கொண்ட ரீசென்ட் போட்டோஸ் அஜித் ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Ajith

தல அஜித் எந்த அளவுக்கு பைக் ரேஸ் பிரியர் என்பது, அவரது ரசிகர்களுக்கு நன்றாகவே தெரியும். ஷூட்டிங் இல்லாத நாட்களில், பெரிதாக வெளியில் தலை காட்டாமல் இருந்த தல அஜித், சமீப காலமாகவே, ரிஃபில் ஷூட்டிங், மற்றும் பைக் ரேஸ் போன்றவற்றிற்காக வெளியில் வருவதை பார்க்க முடிகிறது.

அந்த வகையில் சமீபத்தில் 'வலிமை' பட ஷூட்டிங்கிற்காக ரஷ்யா சென்ற அஜித், அங்குள்ள பைக் ரேஸர்களுடன் சேர்ந்து சுமார் 5000 கிலோ மீட்டர் பைக் பயணம் மேற்கொண்டார். பின்னர், சென்னை வந்த அஜித் சில நாட்கள் குடும்பத்தினருடன் இருந்துவிட்டு மீண்டும் தன்னுடைய சாகசங்களை கையில் எடுத்துள்ளார்.

சமீவனத்தில் டெல்லி சென்ற அஜித், அங்கு ரசிகர்களுடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் வைரலாகியது. இந்த பயணத்தின் போது, சாகச பெண்மணி ஒருவரை சந்தித்தார் அஜித்.

இதுகுறித்து அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் உறுதி செய்தி செய்திருந்தார். பைக்கில் 7 continents, 64 countries -சை சுத்தி வந்த மாரல் யாசர்லூ என்கிற சாகச பெண்ணை தல அஜித் சந்தித்துள்ளார். அவரிடம் பைக்கில் டிராவல் செஞ்ச அனுபவங்கள் பத்தியும் விவரமாக கேட்டு தெரிந்து கொண்டதாக  அஜித்தின் மேனேஜரான சுரேஷ் சந்திராவே உறுதி செய்தார்.

தற்போது அஜித் மாரல் யார்சலூவுடன் எடுத்து கொண்ட மற்ற சில புகைப்படங்கள், சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளதுடன், அஜித்தின் அடுத்த பைக் ரைடு குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அஜித் அடுத்ததாக, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, மற்றும் ஆப்ரிக்கா ஆகிய இடங்களில் தன்னுடைய பைக் ரைடு பயணத்தை தொடர உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த உண்மை தகவல் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

click me!