நடிகை மீனா பிறந்தநாள் பார்ட்டி! ஒரே கலர் உடையில் ஒன்று திரண்ட பிரபலங்கள்! தெறிக்கவிடும் போட்டோஸ்!

First Published | Sep 24, 2021, 3:38 PM IST

நடிகை மீனா (Meena) பிறந்தநாள் பார்ட்டியில் நடிகை சினேகா (Sneha), ப்ரீத்தா ஹரி (Preetha), உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்த புகைப்படங்களை தற்போது மீனா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட லைக்குகள் குவிந்து வருகிறது.

தமிழில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து, அதன் பின்னர் 1991ம் ஆண்டு ராஜ்கிரண் நடிப்பில் வெளியான “ராசாவின் மனசிலே” படத்தின் மூலம் ஹீரோயினாக உயர்ந்தவர் நடிகை மீனா. 
 

அதன் பின்னர் ரஜினி, கமல், சரத்குமார், பிரபு என அப்போதைய உச்ச நட்சத்திரங்களின் முன்னணி ஜோடியாக வலம் வந்தார்.

Tap to resize

அடங்க ஒடுக்கமான குடும்ப பெண்ணாக இருந்தாலும் சரி, அல்ட்ரா மார்டன் லுக்கில் கலக்குவதானாலும் சரி எந்த கேரக்டருக்கும் கச்சிதமாக பொருந்தினார். அதனால் தான் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். 

90’ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியாக வலம் வந்த மீனா, தளபதி விஜய்யுடன் “ஷாஜகான்” படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார். அந்த பாட்டும் பட்டி, தொட்டி எல்லாம் செம்ம ஹிட்டானது. 

திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த மீனா, குழந்தை பிறந்த பிறகு ஓவராக வெயிட் போட்டு குண்டானார்.

அதன் பின்னர் சில விளம்பர படங்களிலும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன்‘முத்து’, ‘வீரா’,‘எஜமான்’ஆகிய சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ள மீனா, 24 வருடங்களுக்குப் பிறகு தற்போது ரஜினிகாந்துடன் “அண்ணாத்த” படத்தில் இணைந்துள்ளார்.

ஏற்கனவே 'படையப்பா' படத்தில் முதலில்... ரஜினிக்கு ஜோடியாக, அதாவது சௌந்தர்யாவாக நடிக்கும் கதாப்பாத்திரம் இவருக்கு தான் வந்ததாம் ஆனால் கால்ஷீட் காரணமாக அந்த வாய்ப்பு மிஸ் ஆனதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இவரை போலவே இவருடைய மகளும் விஜய் நடித்த தெறி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தன்னுடைய முதல் படத்திலேயே ரசிகர்களை வசீகரித்தார்.

சமீபத்தில் மீனா தன்னுடைய செல்ல மகள் நைனிகாவுடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது.

இதை தொடர்ந்து தன்னுடைய பிறந்தநாள் பார்ட்டியை தோழிகளுடன் சந்தோஷமாக கொண்டாடியுள்ள மீனா அதன் புகைப்படங்களையும் தற்போது வெளியிட்டுள்ளார்.

பர்த்டே பேபியான மீனா மட்டுமே வேறு நிற உடையில் இருந்தாலும், இவருடைய பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொண்ட, நடிகை சினேகா, அவரது சகோதரி, ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி, ப்ரீத்தா ஹரி, அவரது சகோதரி, மற்றும் பலர் கருப்பு நிற உடையில் உள்ளனர். இந்த புகைப்படங்கள் வெளியாக மீனாவுக்கு பலர் தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

Latest Videos

click me!