'ரோஜா' சீரியலில் இருந்து திடீர் என விலகிய முக்கிய நடிகர்..!! இது தான் காரணமா..?

சன் டிவி தொலைக்காட்சியில், ஒளிபரப்பாகி வரும் (Roja ) சீரியலில் இருந்து, நடிகர் வெங்கடேஷ் ரங்கநாதன் (Venkatesh Renganathan) விலக உள்ளதாக கூறியுள்ள தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பல்வேறு வித்தியாசமான கதைகளை அடிப்படையாக வைத்து, எத்தனை தொடர்கள் ஒளிபரப்பானாலும், சன் டிவி மற்றும் விஜய் டிவி தொடர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் தனி இடம் உள்ளது. அதிலும் பல்வேறு திருப்புமுனைகளுடனும், விறுவிறுப்புடனும் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ரசிகர்கள் மனதை கவர்ந்து, மற்ற தொலைக்காட்சி தொடர்களுக்கு டி.ஆர்.பி-யில் செம்ம டஃப் கொடுத்து வருகிறது.

அந்த வகையில், சன் டிவி ஒளிபரப்பாகி வரும் 'ரோஜா' சீரியலும் ஒன்று. எப்போது நாயகி அவர் அம்மா, செண்பகத்துடன் இணைவார் என, விறுவிறுப்பான கதையம்சத்துடன் இந்த சென்று கொண்டிருந்த சீரியலில், ஒருவழியாக ரோஜா அவரது அம்மாவுடன் சேர்ந்துவிட்டார்.


ஆனால் ரோஜா செண்பகத்தின் மகள் இல்லை அணு தான் அவர் மகள், என்று நம்பி கொண்டிருப்பவர்கள் எப்போது மாறுவார்கள், அவர்களுக்கு உண்மை எப்போது தெரியவரும் என ரசிகர்களும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் இந்த சீரியலில் நாயகனாக நடித்து வரும் அர்ஜுனுக்கு தம்பியாக அஸ்வின் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் வெங்கட் ரங்கநாதன்.  இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், பாண்டியன் ஸ்டோர் தொடரிலும் ஜீவா என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தற்போது திடீர் என, 'ரோஜா ' சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் போட்டுள்ள பதிவில்... 'தன்னுடைய ரசிகர்களுக்கு வணக்கம், இந்த செய்தி வருத்தமானது தான்... நிரந்தரமாக ரோஜா சீரியலில் இருந்து விலகுகிறேன். இந்த தகவல் உங்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்திருந்தால் மன்னித்து விடுங்கள், பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஜீவாவாக என்னை தொடர்ந்து பார்க்கலாம்.

மேலும் உங்கள் அனைவருடைய அன்பு மற்றும் ஒத்துழைப்புக்கு நன்றி என தெரிவித்துள்ளார். திடீர் என இந்த சீரியலில் இருந்து இவர் விலக காரணம், ஒரே நேரத்தில் பாண்டியன் ஸ்டோர் மற்றும் ரோஜா ஆகிய சீரியல்களில் நடிக்க நேரம் இல்லாத காரணத்தாலேயே இவர் விலகியுள்ளதாக கூறப்படுகிறது.

Latest Videos

click me!