Valimai Box Office : இவ்ளோ நாள் ஓடியும் விவேகம் சாதனையை முறியடிக்க முடியலையே! இதென்னப்பா வலிமைக்கு வந்த சோதனை?

Ganesh A   | Asianet News
Published : Mar 08, 2022, 09:49 AM IST

Valimai Box Office : இந்தியாவில் வலிமை படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. ஆனால் வெளிநாடுகளில் இப்படம் எதிர்பார்த்த வசூலை குவிக்கவில்லை என்றே கூறப்பட்டு வருகிறது.

PREV
15
Valimai Box Office : இவ்ளோ நாள் ஓடியும் விவேகம் சாதனையை முறியடிக்க முடியலையே! இதென்னப்பா வலிமைக்கு வந்த சோதனை?

அஜித்தின் வலிமை

நடிகர் அஜித்தின் 60-வது படம் வலிமை. சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் எச்.வினோத் தான் இப்படத்தை இயக்கி உள்ளார். பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். 

25

வலிமை டீம்

இப்படத்தில் அஜித்துடன் பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி, தெலுங்கு நடிகர் கார்த்திகேயா, ராஜு ஐயப்பா, புகழ், சுமித்ரா நாயர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா மற்றும் ஜிப்ரான் இசையமைத்து இருந்த இப்படத்திறகு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருந்தார்.

35

ரூ.200 கோடி வசூல்

கடந்த 2019-ம் ஆண்டே தொடங்கப்பட்ட இப்படம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தாமதமானது. 2 ஆண்டுகள் கடின உழைப்புக்கு பின் எடுத்து முடிக்கப்பட்ட இப்படம் கடந்த மாதம் 24-ந் தேதி உலகமெங்கும் பிரம்மாண்டமாக ரிலீசானது. இப்படம் விமர்சன ரீதியாக சில சறுக்கல்களை சந்தித்தாலும், பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பியது. படம் வெளியான பத்தே நாளில் ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. 

45

வெளிநாடுகளில் வரவேற்பில்லை

வலிமை படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியானது. பான் இந்தியா படமாக வெளியானதால் இந்தியாவில் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. ஆனால் வெளிநாடுகளில் வலிமை படம் எதிர்பார்த்த வசூலை குவிக்கவில்லை என்றே கூறப்பட்டு வருகிறது.

55

விவேகத்தை பீட் பண்ண முடியல..

அதற்கு சான்றாக ஆஸ்திரேலியாவில் வலிமை படத்தின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் வெளியாகி இரண்டு வாரங்களில் அங்கு 1.18 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளது. இது அஜித் நடிப்பில் வெளியான விவேகம் படத்தின் வசூலை விட மிகக்குறைவு என கூறப்படுகிறது. ஃபிளாப் படமான விவேகத்துக்கு கிடைத்த வரவேற்பு கூட வலிமை படத்துக்கு கிடைக்காதது படக்குழுவுக்கு சற்று வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படியுங்கள்... Arabic Kuthu Song : ‘அரபிக் குத்து’ லிரிக்ஸுக்கு விஜய்யின் ரெஸ்பான்ஸ் என்ன? - ஓப்பனாக சொல்லிய சிவகார்த்திகேயன்

click me!

Recommended Stories