AK 61 -க்காக உடல் எடையை குறைக்கும் அஜித்..வலிமை விமர்சனம் காரணமா? எவ்ளோ கேஜி தெரியுமா..

Kanmani P   | Asianet News
Published : Mar 03, 2022, 06:02 PM IST

அஜித் ‘AK 61’ படத்திற்காக 25 கிலோ உடல் எடையை குறைக்க திட்டமிட்டு, தற்போது, 10 கிலோ எடையை குறைத்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

PREV
18
AK 61 -க்காக உடல் எடையை குறைக்கும் அஜித்..வலிமை விமர்சனம் காரணமா? எவ்ளோ கேஜி தெரியுமா..
ajith

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் (Ajith). இவர் நடிப்பில் அண்மையில் வெளியான வலிமை (Valimai) திரைப்படம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. 

28
valimai shooting spot photos

எச்.வினோத் இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். வசூலிலும் மாஸ்காட்டி வரும் இப்படம் 5 நாட்களில் 150 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

38
Ajith

இதனிடையே அஜித்தின் 61-வது படத்தின் பணிகளும் கடந்த சில தினங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தையும் எச்.வினோத் (H Vinoth) தான் இயக்க உள்ளார்.

48
AK 61 UPADATE

போனி கபூர் தயாரிக்க உள்ள இப்படத்தில் நடிகர் அஜித் வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் 25 கிலோ வரை தனது உடல் எடையை குறைத்து நடிக்க உள்ளாராம்.

58
AK 61 UPADATE

அஜித்தின் AK 61 படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் ஐதராபாத்தில் தொடங்க உள்ளது. இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

68
AK 61 UPADATE

இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. அண்மையில் அஜித் நடிப்பில் வெளியான வலிமை படத்திற்கும் இவர் தான் பின்னணி இசை அமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

78
AK 61 UPADATE

சமீபத்தில் நீளமான தாடியுடன் செம்ம ஸ்டைலிஷாக காட்சியளிக்கிறார் அஜித். மனைவி ஷாலினி (Shalini), மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக் ஆகியோருடன் நடிகர் அஜித் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன. அஜித்தின் இந்த கெட் அப்பை பார்த்த ரசிகர்கள் வேறலெவலில் இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

88
AK 61 UPADATE

இந்நிலையில் அஜித் ‘AK 61’ படத்திற்காக 25 கிலோ உடல் எடையை குறைக்க திட்டமிட்டு, தற்போது, 10 கிலோ எடையை குறைத்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக, தனி பயிற்சியாளரையும் அஜித் நியமித்துள்ளார். ‘வலிமை’ படத்தில் அஜித்தின் உடல் எடை சில காட்சிகளில் ஒல்லியாகவும் சில காட்சிகளில் அதிகரித்தும் காணப்பட்டது விமர்சனம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!

Recommended Stories