வாவ்..சூப்பர்..நடிகர் விஜய் சேதுபதிக்கு கோல்டன் விசா..ஐக்கிய அரபு அமீரகம் அசத்தல்..

Kanmani P   | Asianet News
Published : Mar 03, 2022, 05:33 PM ISTUpdated : Mar 03, 2022, 05:35 PM IST

அமலாபாலை தொடர்ந்து நடிகர் விஜய்சேதுபதிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது...

PREV
18
வாவ்..சூப்பர்..நடிகர் விஜய் சேதுபதிக்கு கோல்டன் விசா..ஐக்கிய அரபு அமீரகம் அசத்தல்..
vijay sethupathi

யுஏஇ வழங்கும் கோல்டன் விசா என்பது அவ்வளவு எளிதில் யாருக்கும் கிடைத்துவிடாது. தங்களுடைய துறையில், சிறந்து விளங்குபவர்களுக்கு மட்டுமே இந்த கௌரவத்தை கொடுத்து வருகிறது ஐக்கிய அரபு அமீரகம். 

28
vijay sethupathi

அந்த வகையில் தற்போது, பல்வேறு பாலிவுட் படங்களிலும், சமூக சேவை பணிகளிலும் ஈடுபட்டு வருபவர்கள், மற்றும் அந்நாட்டில் முதலீடு செய்யும் தொழிலதிபர்கள், திரையுலக நட்சத்திரங்கள் போன்றோருக்கு இந்த விசா வழங்கப்பட்டு வருகிறது.

38
vijay sethupathi

இந்த விசாவுக்கு பல சிறப்புகள் உள்ளன. கோல்டன் விசா வைத்திருப்பவர்கள், எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்கவும், எவ்வித தடையும் இன்றி  வேலை செய்யவும் அனுமதிக்கப்படுவார்கள். 

48
vijay sethupathi

அவர்களும் ஐக்கிய சிட்டிசன்களுக்கு நிகராகவே கருதப்படுவார்கள். இந்த விசா ஒவ்வொருவருக்கும் 5 அல்லது 10 ஆண்டுகள் புதுப்பிக்கும் வகையில் வழங்கப்பட்டு வருகிறது. 

58
vijay sethupathi

ஏற்கனவே இந்த கோல்டன் விசாவை பிரபல பாலிவுட் நடிகர்களான ஷாருக்கான், சஞ்சய் தத் ஆகியோர் வைத்திருக்கின்றனர். அதேபோல் தென்னிந்தியாவில் மலையாள நடிகர்களான மோகன்லால் மற்றும் மம்முட்டி ஆகியோர்களுக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டது. 

68
Vijaysethupathi

நடிகைகளை பொறுத்தவரையில் திரிஷா, மீரா ஜாஸ்மின், ஊர்வசி ரவ்துலா ஆகியோர் வைத்திருக்கும் நிலையில், சமீபத்தில்  நடிகை அமலா பாலுக்கும் கோல்டன் விசா வழங்கப்பட்டு உள்ளது.

78
Vijaysethupathi

அமலாபாலை தொடர்ந்து தற்போது நடிகர் விஜய்சேதுபதிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது...

88
Vijaysethupathi

மக்கள் செல்வனுக்கு கோல்டன் விசா கிடைத்திருப்பது குறித்த மகிழ்ச்சியான செய்தி சமூக வலைதளத்தில் பரவி வருவதோடு...விஜய் சேதுபதிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.. 

click me!

Recommended Stories