'துணிவை' முடித்த கையேடு சபரிமலைக்கு கிளம்பிய எச்.வினோத்.! ஆரம்பிக்கும் முன்பே முந்தி கொண்ட விக்னேஷ் சிவன்!

Published : Jan 13, 2023, 11:02 PM IST

அஜித் நடித்த 'துணிவு' படத்தை ரிலீஸ் செய்த பின்னர், இயக்குனர் எச்.வினோத் சபரிமலைக்கு சென்றுள்ள நிலையில், அஜித்தின் அடுத்த படத்தை ஆரம்பிக்கும் முன்னரே, இயக்குனர் விக்னேஷ் சிவன் சபரிமலைக்கு சென்றுள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாகி.  

PREV
15
'துணிவை' முடித்த கையேடு சபரிமலைக்கு கிளம்பிய எச்.வினோத்.! ஆரம்பிக்கும் முன்பே முந்தி கொண்ட விக்னேஷ் சிவன்!

தல அஜித் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில், ஏற்கனவே நடித்து வெளியான 'நேர்கொண்ட பார்வை' மற்றும் வலிமை ஆகிய இரண்டு படங்களுக்குமே, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது மூன்றாவது முறையாக எச்.வினோத் மற்றும் போனி கபூர் கூட்டணியில் அஜித் நடித்து முடித்துள்ள 'துணிவு' திரைப்படம் ஜனவரி 11ஆம் தேதி வெளியானது.

 

25

படம் வெளியான நாளில் இருந்தே, ரசிகர்கள் மத்தியிலும்... ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தின் வெற்றிய இன்னும் சில நாட்களில் படக்குழுவினர் கொண்டாட உள்ளதாக கூறப்படுகிறது.

பிரபல நடிகரின் மகளை தூக்கி வைத்து கொண்டு போஸ் கொடுத்த விஜய்! வைரலாகும் போட்டோஸ்..!

 

35

இந்நிலையில் 'துணிவு' திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என சபரிமலைக்கு மாலை போட்டு இருந்த இயக்குனர் எச்.வினோத் படம் ரிலீஸ் ஆன கையோடு சபரிமலைக்கு சென்றுள்ளார். இது குறித்த சில வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

 

45

இவரை தொடர்ந்து அஜித்தின் அடுத்த படத்தை இயக்க உள்ள, பிரபல நடிகை நயன்தாராவின் காதலரும், இயக்குனருமான விக்னேஷ் சிவன் தல படத்தை ஆரம்பிக்கும் முன்னரே சபரிமலைக்கு சென்றுள்ளார்.எரிமேலிக்கு செல்லும் வழியில் நின்று கொண்டு, இவர் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட வைரலாகி வருகிறது.

விஜய்யின் இளமைக்கு காரணம் இந்த புட் டயட் தானா..? நடிகர் ஷியாமுக்கு ஷாக் கொடுத்த தளபதி..!

 

55

மேலும் அஜித்தின் துணிவு படத்தையும், அடுத்ததாக அஜித்தின் படத்தையும் எடுக்க உள்ள இரண்டு இயக்குனர்களும் சபரிமலைக்கு சென்றுள்ளனர் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

 

click me!

Recommended Stories