ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த குட் பேட் அக்லி:
அஜித் ரசிகர்களின், மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஏப்ரல் 10-ஆம் தேதி ரிலீசான திரைப்படம் 'குட் பேட் அக்லி'. விடாமுயற்சி ரசிகர்களை ஏமாற்றிய நிலையில், ஆதிக் ரவிச்சந்திரனின் 'குட் பேட் அக்லி' ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா? என்று ரசிகர்கள் காத்திருந்த நிலையில்... அனைத்து தரப்பு ரசிகர்களையும் மகிழ்விக்கும் ஃபுல் டைம் எண்டெர்டெயின்மெண்ட் படமாக தற்போது 'குட் பேட் அக்லி' வெளியாகி திரையரங்குகளில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
Good Bad Ugly Box office Collection:
குட் பேட் அக்லி வசூல்:
மேலும் பல திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல்லாக படம் ஓடிக் கொண்டிருப்பதால், இப்படத்தின் வசூல் இன்னும் சில நாட்களில் ரூ. 200 கோடியை எட்டும் என திரையரங்கு உரிமையாளர்கள் கூறி வருகின்றனர். பல வருடத்திற்கு பின்னர், அஜித்துக்கு சூப்பர் ஹிட் வெற்றியை குட் பேட் அக்லி கொடுத்துள்ள நிலையில், இந்த படத்தில் சுமார் 9 பழைய பாடல்களை மீண்டும் பயன்படுத்தி இருந்தார் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்.
Ilaiyaraaja Songs used in Good bad ugly:
ரூ.5 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ்:
குறிப்பாக இளையராஜா இசையில் வெளியான, "என் ஜோடி மஞ்ச குருவி, இளமை இதோ இதோ, ஒத்த ரூபா தாரேன், போன்ற பாடல்களும் இடம் பெற்றிருந்தன. இந்நிலையில் தன்னுடைய அனுமதி இன்றி குட் பேட்லி படத்தில், தன்னுடைய பாடல்கள் இடம் பெற்றுள்ளதாக கூறி படக்குழுவினருக்கு இளையராஜா ரூ.5 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
விடாமுயற்சி லைஃப் டைம் வசூல் சாதனையை 4 நாளில் சல்லி சல்லியாய் நொறுக்கிய குட் பேட் அக்லி!
Ilaiyaraaja Demanding:
நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்:
மேலும் இந்த நோட்டீஸில் மூன்று பாடல்களையும், படத்தில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்றும், ஏழு நாட்களுக்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இல்லை என்றால் நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடரப்படும் என்று இளையராஜா தரப்பில் இருந்து எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. எனவே இந்த நோட்டீஸ் தொடர்பாக படக்குழு என்ன முடிவெடுக்கும்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.