நடிகர் அஜித்குமார் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படம் இன்று உலகமெங்கும் ரிலீஸ் ஆகி உள்ள நிலையில், அதில் உள்ள தளபதி விஜய்யின் ரெபரன்ஸ் பற்றி பார்க்கலாம்.
Vijay Reference in Ajith's Good Bad Ugly : நடிகர் விஜய்யும், அஜித்தும் சமகாலத்தில் சினிமாவுக்குள் நுழைந்தர்வர்கள். அதுமட்டுமின்றி இவர்களது வளர்ச்சியும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான் இருந்தது. இதனால் இவர்கள் இருவரையும் ஒப்பிடுவது பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. இவர்கள் இருவரும் நட்புடன் பழகி வந்தாலும், இவர்களின் ரசிகர்கள் அடிக்கடி எலியும் பூனையுமாக சமூக வலைதளங்களில் சண்டை போட்டுக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
24
Ajith, Vijay
கோட் படத்தில் அஜித் ரெபரன்ஸ்
ரசிகர்கள் மோதல் என்பது தொடர்வது போல், அஜித் - விஜய்யின் நட்பும் பல வருடங்களாக தொடர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு வெளிவந்த விஜய்யின் கோட் படத்தில் கூட அஜித்தின் மங்காத்தா பட ரெபரன்ஸ் இருந்தது. குறிப்பாக மங்காத்தா படத்தில் அஜித் பேசும் டயலாக்கான ‘இனிமே குடிக்கவே கூடாதுடா’ என்பதை நடிகர் விஜய் பேசி இருந்தார். அதுமட்டுமின்றி கோட் திரைப்படத்தில் மங்காத்தா படத்தின் மாஸான பிஜிஎம்-ஐயும் பயன்படுத்தி இருந்தனர்.
கோட் பட ரிலீஸ் சமயத்திலேயே, குட் பேட் அக்லி படத்திலும் விஜய்யின் ரெபரன்ஸ் இருப்பதாக இயக்குனர் வெங்கட் பிரபு கூறி இருந்தார். இதை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனும் அண்மையில் உறுதி செய்திருந்தார். ஆனால் அது என்ன ரெபரன்ஸ் என்பது சஸ்பென்ஸாக வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், இன்று அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படம் ரிலீஸ் ஆகி உள்ள நிலையில், அப்படத்தில் இடம்பெற்ற விஜய்யின் ரெபரன்ஸ் என்ன என்பது தெரிய வந்துள்ளது.
44
Vijay Reference in Good Bad Ugly
அஜித் பேசிய விஜய்யின் மாஸ் டயலாக்
அதன்படி நடிகர் விஜய் துப்பாக்கி படத்தில் பேசும் மாஸ் டயலாக்கான 'I Am Waiting' என்கிற வசனத்தை தான் அஜித் குட் பேட் அக்லி படத்தில் பேசி இருக்கிறார். அதுவும் வாரிசு மற்றும் லியோ படத்தில் நடிகர் விஜய் டேபிள் மேல் கால்வைத்து கெத்தாக அமர்ந்திருப்பது போல் அஜித்தும் கெத்தாக அமர்ந்தபடி நண்பா 'I Am Waiting' என டயலாக் பேசி உள்ளார். துப்பாக்கி படத்தில் இண்டர்வெல் சீனாக இது வந்திருக்கும், குட் பேட் அக்லியிலும் இண்டர்வெல் சீனில் தான் அஜித் 'I Am Waiting' என்கிற வசனத்தை பேசி இருக்கிறார். இந்த காட்சி வரும்போது தியேட்டரில் விசில் பறக்கிறது.