ரசிகர் என நம்பி கை கொடுத்தேன்... எனக்கே பிளேடு போட்டுட்டாங்க..! அஜித் பகிர்ந்த பகீர் சம்பவம்

Published : Nov 01, 2025, 08:56 AM IST

தமிழ் திரையுலகில் முன்னணி மாஸ் நடிகராக வலம் வரும் அஜித் குமார், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ரசிகர் சந்திப்பின் போது நடந்த கசப்பான சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.

PREV
14
Ajith Shares Shocking Incident

கோலிவுட்டில் அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்ட நடிகர்களில் அஜித் குமாரும் ஒருவர். இவர் மற்ற நடிகர்களைப் போல் பட விழாக்களில் கலந்துகொள்ள மாட்டார், ஆடியோ லாஞ்ச், பட புரமோஷன்கள் என எதிலும் பங்கேற்க மாட்டார். ஆனாலும் இவருக்கான ரசிகர் பட்டாளம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதற்கு முக்கிய காரணம் அவரின் குணம் தான். தன்னுடைய ரசிகர்கள் என்ன அடாவடி செய்தாலும் கண்டுகொள்ளாத நடிகர்களுக்கு மத்தியில், தன்னுடைய ரசிகன் என்றால் அவன் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என விரும்புபவர் அஜித். தன் ரசிகர்கள் ஏதேனும் தவறு செய்தால் அந்த இடத்திலேயே தட்டிக் கேட்பார்.

24
அஜித்துக்கு நடந்த கசப்பான சம்பவம்

நடிகர் அஜித் பேட்டிகள் கொடுப்பதையும் பல வருடங்களாக தவிர்த்து வந்தார். ஆனால் அண்மையில் கார் ரேஸில் களமிறங்கிய பின்னர், அந்த விளையாட்டை ஊக்கப்படுத்த முடிவெடுத்து வெளிநாட்டு சேனல்கள் சிலவற்றிற்கு பேட்டிகள் அளித்திருந்தார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் இந்திய ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் மனம் விட்டு பேசி இருக்கிறார் அஜித். தன் கையில் நிறைய காயங்கள் இருப்பதை சுட்டிக்காட்டி பேசிய அஜித், கடந்த 2005-ம் ஆண்டு நடந்த ஒரு கசப்பான சம்பவத்தையும் பகிர்ந்து கொண்டார்.

34
கையில் பிளேடால் கீறினார்கள்

அந்த சமயத்தில் நான் வெளியே சென்றிருந்தபோது ரசிகர்கள் என்னைப் பார்த்ததும், குவிந்துவிட்டார்கள். அவர்கள் என்னிடம் கைகொடுப்பதற்காக கையை நீட்டினார்கள். நானும் கை கொடுத்துவிட்டு, பின்னர் காரில் ஏறிய பின்னர் தான் என் கையில் இருந்து இரத்தம் வழிவதை பார்த்தேன். அப்போதுதான் கூட்டத்தில் யாரோ ஒருவர் என் கையை பிளேடால் கீறி இருக்கிறார்கள் என்பது தெரியவந்தது. அந்த தழும்பு என் கையில் இன்னும் இருக்கிறது என தன் கையைக் காட்டி, வலியுடன் பேசி இருக்கிறார் அஜித்.

44
29 முறை அறுவை சிகிச்சை

அதேபோல் தான் அடிக்கடி விபத்தில் சிக்குவது பற்றி பேசி உள்ள அவர், கார் ரேஸிங் செய்பவர்கள், விபத்தில் சிக்குவது வழக்கம் தான், நான் ஒரு நடிகன் என்பதால் அது வெளியில் தெரிகிறது. இதுவரை விபத்தில் சிக்கி நான் 29 முறை அறுவை சிகிச்சை செய்திருக்கிறேன். இத்தனை காயங்கள் வந்தும் ஒருமுறை கூட என் மனதில் இந்த ரேஸிங்கை விட்டுவிடலாம் என்கிற எண்ணம் தோன்றியதே இல்லை. ஒவ்வொரு முறை விபத்தில் சிக்கும் போதும் அதில் இருந்து பாடத்தைக் கற்றுக் கொண்டு, அதில் இருந்து கடந்து செல்ல வேண்டும். அதைத் தான் இத்தனை ஆண்டுகளாக செய்து வருகிறேன் என அஜித் கூறி உள்ளார். அவரின் இந்த பேட்டி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories