140 கோடி பேர் இருக்கிற நாட்டுல கூட்டத்தை கூட்டறது ஒன்னும் பெரிய விஷயம் அல்ல..! விஜய்க்கு அதிர்ச்சி கொடுத்த அஜித்

Published : Nov 01, 2025, 08:24 AM IST

கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து நடிகர் அஜித் முதல்முறையாக கருத்து தெரிவித்துள்ளார். ஹீரோ வழிபாடு கலாச்சாரம் மற்றும் செல்வாக்கை காட்ட கூட்டத்தை கூட்டும் பழக்கமே இதுபோன்ற துயரங்களுக்கு காரணம், இதற்கு ஒரு தனிநபர் மட்டும் பொறுப்பல்ல.

PREV
14
கரூர் சம்பவம்

கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பரப்புரை கூட்டம் செப்டம்பர் 27ம் தேதி சனிக்கிழமை அன்று நடைபெற்றது. அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உள்பட மொத்தம் 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு விஜயே முழு காரணம் என்றும் அவரை கைது செய்ய வேண்டும் என திமுக மற்றும் கூட்டணி கட்சிகளும் கூறி வந்தனர். ஆனால், அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் காவல்துறை பாதுகாப்பு சரிவர வழங்காததே காரணம் என திமுக அரசை குற்றம்சாட்டி வந்தனர். இந்த விஷயத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினேரே விஜய்க்கு ஆதரவாகவே பேசி வருகின்றனர்.

24
முதல்முறையாக வாய்த்திரந்த அஜித்

இந்த விஷயத்தில் தமிழ் திரையுலகையினர் விஜய்க்கு ஆதரவாக ஒரு சிலரும், எதிராக ஒரு சிலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக கரூர் சம்பவம் குறித்து முதல்முறையாக நடிகர் அஜித் வாய்திறந்துள்ளார். இதுதொடர்பாக தனியார் ஆங்கில யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த நடிகர் அஜித்: கூட்டத்தை சேர்ப்பது பெருமை என்ற மனப்பான்மை, ஊடகங்கள் முதல் நாள் காட்சிகளை பெரிதுபடுத்திக் காட்டுவது போன்றவற்றால் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படுகின்றன. ஒரு பெரிய கூட்டத்தை கூட்டி நாம் யார் என்பதை காட்ட கூடிய சமுதாயமாக மாறிவிட்டோம். இது முடிவுக்கு வர வேண்டும்.

34
ஒட்டுமொத்த திரை துறைக்கே களங்கம்

ஹீரோ வழிபாடு கலாச்சாரம் ஒட்டுமொத்த திரையுலகிற்கும் தவறான பெயரை ஏற்படுத்துகிறது. வெற்றி என்பது ஒரு காட்டு குதிரை போன்றது. யார் வேண்டுமானாலும் அதன் மீது ஏறலாம், ஆனால் அதை அடக்க முடியாவிட்டால், அது உங்களைத் தூக்கி எறிந்துவிடும். கிரிக்கெட் போட்டியை காண கூட்டம் சேரும்போது இது போன்ற அசம்பாவிங்கள் எதுவும் நடப்பதில்லை. தியேட்டரில் முதல் காட்சி, பிரபலங்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் மட்டும் இப்படி நடக்கிறது. இதனால் ஒட்டுமொத்த திரை துறைக்கே களங்கம் ஏற்படுவதாக வேதனையுடன் தெரிவித்தார்.

44
அந்த தனிநபர் மட்டும் பொறுப்பல்ல

ரசிகர்களின் அன்புக்காகவே நாங்கள் உழைக்கிறோம்; உங்கள் உயிர் முக்கியம், அதைப் பணயம் வைத்து அன்பை வெளிப்படுத்த வேண்டாம்; FDFS கலாச்சாரத்தை ஆதரிக்கக்கூடாது. 140 கோடி இருக்கும் நாட்டில் ஒரு பெரிய Gathering ஒன்னுமே இல்ல. ஆனா நம் செல்வாக்கை காட்ட கூட்டத்தை கூட்டும் பழக்கம் ஒழிய வேண்டும். அண்மையில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு அந்த தனிநபர் மட்டும் பொறுப்பல்ல, இதற்கு நாம் அனைவருமே பொறுப்பு என்று அஜித் அழுத்தம் திருத்தமாக தெரிவித்துள்ளார். விஜய்க்கு ஆதரவாக அஜித் கருத்து தெரிவித்திருப்பதாகவும் அவருக்கு தவெகவினர் நன்றியை தெரிவித்து வருகின்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories