Ajith Kumar Kadhal Kottai Movie Sacrifice Unknown Facts in Tamil : தேவையானி மற்றும் அஜித் நடிப்பில் வெளியான காதல் கோட்டை படத்திற்காக அஜித் செய்த தியாகம் என்ன என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
நடிகர் அஜித் குமார் மற்றும் தேவயானி இருவரும் இணைந்து நடித்த படங்களில் ஒன்று தான் காதல் கோட்டை. இந்த படத்திற்காக அஜித் தனது வாழ்க்கையில் தன்னம்பிக்கை மூலம் நடித்த படம் தான் காதல் கோட்டை இவர் நினைத்து பார்க்காத வகையில் பெரிய வெற்றி கிடைத்தது. படத்தின் அஜித்தின் சம்பளம், படம் எப்படி உருவானது என்பதை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
26
தல அஜித்தின் ஆரம்பகால போராட்டங்கள்
நடிகர் அஜித் குமார் - தேவயானி இருவரும் இணைந்து நடித்த படங்களில் ஒன்று காதல் கோட்டை. இயக்குநர் அகத்தியன் இயக்கத்தில் உருவான இந்த படம் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியானது. மேலும் இந்த படத்தில் கரண், மணிவண்ணன், தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று, மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது. படத்தின் வெற்றிக்கு தேனிசை தென்றல் தேவாவின் இசையும் காரணமாக மாறியது.
36
Thala Ajith Early Struggles
காதல் கோட்டை படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற காரணமே படத்தின் கதை தான். அதாவது, படத்தில் அஜித்தும் தேவயானியும் ஒருவரை ஒருவர் சந்திக்காமலே காதலித்துக் கொள்வார்கள். அவர்கள் காதலும் அன்பும் கடித போக்குவரத்திலேயே நடைபெறும். இந்த கதை மொத்த தமிழ் சினிமாவுக்கும் புதியது. தமிழ் ரசிகர்கள் எதிர்பாக்காத வகையிலும் ஒவ்வொரு இளைஞரின் மனதை கொள்ளையடித்ததாக மாறியது.
46
காதல் கோட்டை படத்தை நிராகரித்த தயாரிப்பாளர்கள்:
பல தயாரிப்பாளர்கள் காதல் கோட்டை ஸ்கிரிப்டை நிராகரித்தார்கள். ஒரு தயாரிப்பாளர் அவரிடம் சென்று கேட்டபோது அவர் நீங்கள் இயக்கத்தை விட்டுவிட்டு உங்களது பிழைப்புக்காக ஒரு சிறிய கடையை வைத்திருக்க விரும்புகிறீர்களா என்று கேட்டார். மற்றொரு தயாரிப்பாளர் வேறு ஸ்கிரிப்டை எழுதியதற்காக என்னைக் கடுமையாக சாடினார். கதையை நம்பும் ஒரு தயாரிப்பாளரை இறுதியாகப் பெறுவதற்கு முன்பு நான் இதையெல்லாம் எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்றெல்லாம் அகத்தியன் ஒரு நேர்காணலில் கூறியிருந்தார்.
56
காதல் கோட்டைக்காக அஜித்தை தேர்வு செய்த அகத்தியன்:
நான் காதல் கோட்டைக்காக ஒரு இளம் நடிகராகவும் துறுதுறுவென இருக்கும் ஒரு இளைஞரை தேடிக் கொண்டிருந்தேன். இந்த படத்தில் நடிக்க வேண்டியவர் வேறொருவர் அதன் பிறகு தான் அஜித் தற்போதைய இளைஞர்களில் மிகவும் கலராகவும் அழகாகவும் இருப்பதால் நான் அஜித்தை தேர்வு செய்தேன். எனினும், இது சிவசக்தி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான ஒரு சிறிய-நடுத்தர பட்ஜெட் படமாகும். அதனால் அஜித்திற்கு குறைந்த அளவு சம்பளம் கொடுக்கப்பட்டது 6 லட்சம் ரூபாய் தான் அஜித்திற்கு காதல் கோட்டை படத்தில் கிடைத்த சம்பளம். அப்படத்தையும் சம்பளத்தை ஒத்துக் கொண்டு நடித்தார். எதிர்பாக்காத வகையில் விஸ்வரூப வெற்றியை பெற்றார் அஜித்குமார்.இது விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
66
காதல் கோட்டை அஜித் தியாகம்
நட்பை காதலாக மாற்றி சினிமாவாக மாற்றினாலும், காதல் கோட்டை படத்திற்கு பெரும் வெற்றியை ரசிகர்கள் வாரி வழங்கினார்கள். அஜித்தை காதல் மன்னனாக மாற்ற இந்த படமும் ஒரு முக்கிய காரணமாக மாறியது. காதல் கோட்டை படத்திற்கு சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது, சிறந்த இயக்கத்திற்கான தேசிய விருது மற்றும் சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதையும் பெற்றது. படம் திரையரங்கில் மட்டுமே சுமார் 250 நாட்களுக்கு மேல் ஓடி வெள்ளி விழா கண்டது. தமிழில் காதல் கோட்டை படத்திற்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்ததால், இயக்குநர் அகத்தியன் இந்த படத்தை கன்னடத்திலும், பெங்காலியும் மற்றும் இந்தியிலும் இயக்கி அங்கேயும் வெற்றிகளைக் குவித்தார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.