அஜித்தை பாத்துதான் நான் என்னை உருவாக்கிக் கொண்டு இருக்கேன்: நடிகர் மணிகண்டன்!

Published : Jan 18, 2025, 09:33 AM IST

Ajith Kumar is My Inspiration Says Manikandan : அஜித்தை பார்த்து பார்த்து தான் நான் என்னை உருவாக்கிக் கொண்டேன் என்று நடிகர் மணிகண்டன் கூறியுள்ளார்.

PREV
16
அஜித்தை பாத்துதான் நான் என்னை உருவாக்கிக் கொண்டு இருக்கேன்: நடிகர் மணிகண்டன்!
Ajith Kumar is Role Model Says Manikandan, Ajith Kumar Car Race

கடின உழைப்பு, விடாமுயற்சியின் மூலமாக சினிமாவில் காலூன்றி வந்தவர் அஜித் ஒருவர் மட்டுமே. அவருக்கு எந்தவித சினிமா பின்புலமும் இல்லை. 32 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் எத்தனையோ வெற்றி படங்களையும் கொடுத்திருப்பார், எத்தனையோ தோல்வி படங்களையும் கொடுத்திருந்தார். அதுமட்டுமின்றி தான் உண்டு தன்னுடைய வேலை உண்டு என்று எப்போதும் சைலண்டாக இருப்பார். ரசிகர் மன்றமும் கிடையாது.

26
Manikandan, Ajith Kumar is Role Model Says Manikandan

ரசிகர்கள் மீதும் அவர்களது குடும்பத்தினர் மீதும் அன்பும், அக்கறையும் கொண்ட நல்ல மனிதர். சக நடிகர், நடிகைகள் போற்றும் அளவிற்கு ஒரு நல்ல நடிகராக இன்று வரையில் சினிமாவில் தன்னை நிரூபித்துக் காட்டியிருக்கிறார். எத்தனையோ ரசிகர்களுக்கு தன்னை ஒரு ரோல் மாடலாக அடையாளப்படுத்தியிருக்கிறார். அதற்கு சமீபத்தில் துபாயில் நடைபெற்ற 24ஹெச் சீரிஸ் கார் ரேஸ் ஒரு சான்று.

36
24H Series, Ajith Kumar, Kudumbasthan Release Date

சினிமாவை ஒதுக்கி வைத்துவிட்டு தன்னுடைய ஃபேஷனான கார் ரேஸில் கலந்து கொண்டு அதற்காக கிட்டத்தட்ட ஒரு மாத காலம் கடினமாக உழைத்து முறையாக பயிற்சியும் செய்த பிறகு கார் ரேஸில் பங்கேற்றார். அதில் பயிற்சியின் போது எதிர்பாராத விபத்தையும் சந்தித்தார். எனினும், அதிலிருந்து பின் வாங்காமல் 3ஆவது இடம் பிடித்து சாதனை படைத்தார்.

46
Actor Manikandan, Ajith Kumar Car Race

சினிமாவில் எத்தனையோ வெற்றி படங்களை கொடுத்திருந்த போது இல்லாத மகிழ்ச்சியை கார் ரேஸில் வெற்றி பெற்ற பிறகு வெளிப்படுத்தினார். அவர் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்ல. இந்திய நாட்டின் தேசிய கொடியை கையில் ஏந்திய படியே மகிழ்ச்சியின் ஒவ்வொரு நிமிடத்தையும் கொண்டாடினார். வெற்றிக்கு பிறகு அஜித் பேசிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

56
Ajith Dubai Car Race Video, Kudumbasthan

கடந்த ஆண்டு அஜித்தின் தரிசனம் கிடைக்காத ரசிகர்களுக்கு இந்த ஆண்டு டபுள் மடங்கு டிரீட் கொடுத்து வருகிறார். இந்த ஆண்டு அடுத்தடுத்து 2 படங்கள் வெளியாக இருக்கிறது. அஜித் நடித்த விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி இந்த ஆண்டில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் தான் திரைக்கதை எழுத்தாளரும், நடிகருமான மணிகண்டன் அஜித் தான் தன்னுடைய இன்ஸ்பிரேஷ் என்று கூறியுள்ளார். குடும்பஸ்தன் பட புரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மணிகண்டன் இந்தப் படம் எல்லோருக்கும் பிடிச்ச படமாக இருக்கும். நடுத்தர மனிதனின் வாழ்க்கையை இந்தப் படம் பிரதிபலிக்கும். சினிமா வாழ்க்கையில் என்னுடைய இன்ஸ்பிரேஷன் அஜித் தான். அவரை பார்த்து தான் நான் என்னை உருவாக்கிக் கொண்டேன் என்று கூறியுள்ளார்.

66
Ajith Kumar is Role Model Says Manikandan

இவரது நடிப்பில் வந்த ஜெய் பீம் படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றது. நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியிருந்தாலும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. குட் நைட் மற்றும் லவ்வர் ஆகிய படங்களிலும் தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார். இயக்குநர் ராஜேஷ்ஸ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன், சான்வே மேகனா, குரு சோமசுந்தரம், ஆர் சுந்தர்ராஜன், நக்கலைட்ஸ் தனம், பிரசன்னா பாலச்சந்திரன் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் வரும் 24ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories