valimai : வீழ்வேனென்று நினைத்தாயோ.... விபத்துக்கு பின் ‘வலிமை’யோடு மீண்டுவந்த அஜித் - கண்கலங்கிய ரசிகர்கள்

Ganesh A   | Asianet News
Published : Dec 14, 2021, 07:06 PM IST

வலிமை (valimai) படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் அஜித் (Ajith) பைக் சாகசம் செய்யும் போது தவறிவிழுந்ததாக கூறப்பட்டது. தற்போது வெளியாகி இருக்கும் மேக்கிங் வீடியோவில் அந்த பதபதைக்க வைக்கும் காட்சியும் இடம்பெற்று உள்ளது.

PREV
18
valimai : வீழ்வேனென்று நினைத்தாயோ.... விபத்துக்கு பின் ‘வலிமை’யோடு மீண்டுவந்த அஜித் - கண்கலங்கிய ரசிகர்கள்

நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றிக்கு பின் அஜித் - எச்.வினோத் இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் வலிமை. போனி கபூர் தயாரித்துள்ள இப்படம் அதிரடி ஆக்‌ஷன் கதையம்சம் கொண்ட படமாக தயாராகி உள்ளது. 

28

இப்படத்தில் நடிகர் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் பைக் சேஸிங் காட்சிகள் பிரம்மிப்பூட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக பல்வேறு பேட்டிகளில் படக்குழுவினர் தெரிவித்தனர். 

38

அதனை தற்போது மேக்கிங் வீடியோ மூலம் கண்முன் காட்டி ஆச்சர்யப்படுத்தி உள்ளனர் என்றே சொல்லலாம். படத்தின் தலைப்பிற்கு ஏற்ப இப்படத்தின் ஸ்டண்ட் காட்சிகள் படத்திற்கு வலிமை சேர்த்துள்ளன.

48

இந்த படத்தில் உள்ள ஸ்டண்ட் மற்றும் பைக் சேஸிங் காட்சிகள் அனைத்திலும் நடிகர் அஜித் டூப் போடாமல் தான் நடித்துள்ளார். அவர் நிஜத்திலும் பைக் ரேஸர் தான் என்பது நினைவு கூறத்தக்கது. வலிமை படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் அஜித் பைக் சாகசம் செய்யும் போது தவறிவிழுந்ததாக கூறப்பட்டது.

58

தற்போது வெளியாகி இருக்கும் மேக்கிங் வீடியோவில் அந்த பதபதைக்க வைக்கும் காட்சியும் இடம்பெற்று உள்ளது. இந்த காட்சியின் போது அஜித்துக்கு ரத்தம் சொட்டும் அளவுக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் அதனை இந்த வீடியோவில் காட்டவில்லை. 

68

அஜித் தடுமாறி விழும் காட்சியின்போது “நாம் தடுமாறி விழலாம்.. ஆனால் மீண்டு எழுவோம்... அதுவே போதும், நாம் போர்களத்தில் இருந்து பின்வாங்காமல் இருப்பதற்கு” என்ற மகாத்மா காந்தி சொன்ன பொன்னான வார்த்தைகளை காட்டி உள்ளனர். 

78

அதற்கு ஏற்றார்போல் வலியையும் பொருட்படுத்தால், மன வலிமையுடன் எழுந்து அந்த காட்சியை நடித்து அசத்தியுள்ளார் அஜித். 

88

அஜித் பைக்கில் இருந்து கீழே விழுவதைப் பார்த்ததும் ஈரக்கொலை நடுங்கிவிட்டதாக ரசிகர்கள் பலரும் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories