அஜித்தை குட் பேட் அக்லி தான் காப்பாத்தணும்; கடைசி 5 பட வசூல் இவ்வளவுதானா?
நடிகர் அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்ரல் 10ந் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில், அவரின் கடைசி 5 படங்களின் வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.
நடிகர் அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்ரல் 10ந் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில், அவரின் கடைசி 5 படங்களின் வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.
Will 'Good Bad Ugly' hit the box office? Ajith's films' collections! தமிழ் திரையுலகில் முன்னணி மாஸ் நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். அவர் நடிப்பில் தற்போது குட் பேட் அக்லி திரைப்படம் தயாராகி உள்ளது. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி உள்ளார். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷாவும், வில்லனாக அர்ஜுன் தாஸும் நடித்துள்ளனர். இப்படம் வருகிற ஏப்ரல் 10ந் தேதி திரைக்கு வர உள்ளது. இந்நிலையில், அஜித்தின் கடைசி 5 படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் என்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
விடாமுயற்சி
அஜித் நடிப்பில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திரைக்கு வந்த படம் விடாமுயற்சி. லைகா நிறுவனம் தயாரித்த இப்படத்தை மகிழ் திருமேனி இயக்கி இருந்தார். இப்படத்தில் அஜித்துடன் அர்ஜுன், ஆரவ், திரிஷா, ரெஜினா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தாலும், இப்படம் பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியை சந்தித்தது. 250 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் வெறும் 137 கோடி மட்டுமே வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் அட்டர் பிளாப் ஆனது.
துணிவு
அஜித் நடிப்பில் கடந்த 2023-ம் ஆண்டு திரைக்கு வந்த படம் துணிவு. இப்படத்தை எச்.வினோத் இயக்கி இருந்தார். இப்படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, தர்ஷன் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தை போனி கபூர் தயாரித்து இருந்தார். பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆன இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.200 கோடி வசூலித்து இருந்தது.
வலிமை
நடிகர் அஜித்தின் 60வது படம் வலிமை. எச்.வினோத் இயக்கத்தில் அவர் நடித்த இப்படத்தை போனி கபூர் தயாரித்திருந்தார். இப்படத்தில் அஜித்துடன் ஹூமா குரேஷி, ராஜ் ஐயப்பா, கார்த்திகேயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்காக மிகவும் ரிஸ்க் எடுத்து பைக் சேஸிங் காட்சிகளில் நடித்திருந்தார் அஜித். இருப்பினும் இப்படம் வெற்றியடையவில்லை. இது மொத்தம் ரூ.164.5 கோடி வசூலித்து இருந்தது.
இதையும் படியுங்கள்... அஜித்துக்கு 285 அடி உயர கட் அவுட்; தலைகுப்புற கவிழ்ந்ததால் தெறித்தோடிய ‘தல’ ரசிகர்கள்!
நேர்கொண்ட பார்வை
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் முதன்முதலாக நடித்த படம் நேர்கொண்ட பார்வை. கடந்த 2019-ம் ஆண்டு திரைக்கு வந்த இப்படம் பாலிவுட்டில் அமிதாப் பச்சன் நடித்த பிங்க் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக வித்யா பாலன் நடித்திருந்தார். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.126.7 கோடி மட்டுமே வசூலித்து இருந்தது.
விஸ்வாசம்
நடிகர் அஜித்தின் கெரியரில் மிகப்பெரிய வெற்றியடைந்த படம் என்றால் அது விஸ்வாசம் தான். இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருந்தார். கடந்த 2019-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆன இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.204.26 கோடி வசூலித்தது. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். சத்யஜோதி நிறுவனம் இப்படத்தை தயாரித்து இருந்தது.
பாக்ஸ் ஆபிஸில் கம்பேக் கொடுப்பாரா அஜித்?
நடிகர் அஜித் தன்னுடைய கெரியரில் அதிகபட்சமாக 200 கோடி தான் வசூலித்து இருக்கிறார். அவருக்கு அடுத்து வந்த சிவகார்த்திகேயன் கூட அவரை வசூலில் மிஞ்சிவிட்டார். அவர் கடைசியாக நடித்த அமரன் ரூ.350 கோடி வசூலித்தது. அதேபோல் அஜித்தின் சமகால நடிகரான விஜய், அதிகபட்சமாக 600 கோடி வசூல் படங்களை கொடுத்துவிட்டார். ஆனால் அஜித் மட்டும் வசூலில் சரிவை சந்தித்து வருகிறார். அவருக்கு குட் பேட் அக்லி கம்பேக் படமாக இருக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படியுங்கள்... விஜய் பட சாதனையை அடிச்சு தூக்கிய அஜித்; புது வரலாறு படைத்த குட் பேட் அக்லி!