Valimai : வலிமை டிக்கெட் 1,500 ரூபாயா.... தியேட்டருக்கு பூட்டு போட்டு அஜித் ரசிகர்கள் ரகளை செய்ததால் பரபரப்பு

Ganesh A   | Asianet News
Published : Feb 22, 2022, 06:16 AM IST

அஜித் நடித்துள்ள வலிமை படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் திரையரங்குகளில் இப்படத்திற்கு முன்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

PREV
16
Valimai : வலிமை டிக்கெட் 1,500 ரூபாயா.... தியேட்டருக்கு பூட்டு போட்டு அஜித் ரசிகர்கள் ரகளை செய்ததால் பரபரப்பு

அஜித் நடிப்பில் ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகி உள்ளது வலிமை (Valimai). இப்படத்தை சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை போன்ற ஹிட் படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்கி உள்ளார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், 'நேர்கொண்ட பார்வை' படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக அவர் அஜித்துடன் இணைந்து உள்ளார்.

26

கடந்த 2019-ம் ஆண்டே தொடங்கப்பட்ட இப்படம் இரண்டு ஆண்டுகள் கடின உழைப்புக்கு பின் தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இப்படம் வருகிற பிப்ரவரி 24-ந் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும் (Huma Qureshi), வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடித்துள்ளார். 

36

மேலும் யோகிபாபு, குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அஜித்தின் தாயாக ஜெயசுதா நடித்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவாளராகவும், திலீப் சுப்பராயன் ஸ்டண்ட் மாஸ்டராகவும் பணியாற்றி உள்ளனர். இப்படத்திற்கு ஜிப்ரான் (Ghibran) மற்றும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளனர். 

46

அஜித் (Ajith) இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக அர்ஜுனன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளில் வெளியாக உள்ளது. ரிலீஸ் நெருங்கி வருவதால் திரையரங்குகளில் இப்படத்திற்கு முன்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

56

இந்நிலையில், திண்டுக்கல்லில் உள்ள ராஜேந்திரா திரையரங்கில் வருகிற 24-ந் தேதி வலிமை (Valimai) படம் திரையிடப்பட உள்ளது. ரசிகர்களுக்கான ஸ்பெஷல் ஷோ டிக்கெட் நேற்று முன்பதிவு செய்யப்பட்டது. அப்போது ஒரு டிக்கெட் 1,500 ரூபாய்க்கு விற்கப்பட்டதால் ஆத்திரமடைந்த அஜித் ரசிகர்கள். தியேட்டருக்கு பூட்டு போட்டு ரகளை செய்துள்ளனர்.

66

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், அஜித் (Ajith) ரசிகர்களை சமாதானப்படுத்த முயற்சித்தனர். போலீசாருடனும் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கிருந்த ரசிகர்களை வெளியேற்றிய போலீசார், திரையரங்குக்கு போடப்பட்ட பூட்டையும் அகற்றினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

இதையும் படியுங்கள்... Boney Kapoor : நட்சத்திர விடுதியில் 80ஸ் ஹீரோயின்களுடன் பார்ட்டி கொண்டாடிய போனி கபூர்.... வைரலாகும் போட்டோஸ்

click me!

Recommended Stories