
Vidaamuyarchi Box Office Collection Day 4 : இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான படம் தான் விடாமுயற்சி. ஆக்ஷன், த்ரில்லர் ஜானரில் எடுக்கப்பட்ட இந்தப் படம் ஹாலிவுட்டில் வெளியான பிரேக்டவுன் படத்தின் தமிழ் ரீமேக். இந்தப் படத்தில் அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருந்தார். இவர்களுடன் இணைந்து அர்ஜூன், ஆரவ், ரெஜினா கஸாண்ட்ரா ஆகியோர் பலர் நடித்திருந்தனர். பொங்கல் பண்டிகையைக்கு வெளிவரும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் படத்தின் ரீமேக் உரிமை பிரச்சனை காரணமாக படத்தின் ரிலீஸ் 6ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
அதன்படி அறிவித்தபடி கடந்த 6ஆம் தேதி விடாமுயற்சி திரைக்கு வந்தது. தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 1000 திரையரங்குகளில் விடாமுயற்சி திரையிடப்பட்டது. முதல் நாள் முதல் ஷோ பார்த்த அஜித் ரசிகர்கள் படத்தை கொண்டாடிய நிலையில், பொதுவான ஆடியன்ஸ் படத்தைப் பற்றி எதிர்மறையான கருத்துக்களை முன் வைத்தனர். இதையடுத்து விடாமுயற்சி கலவையான விமர்சனங்களை பெற தொடங்கியது. என்னதான படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வந்தாலும் படத்தின் வசூலுக்கு மட்டும் இப்போது குறைவில்லை என்று சொல்லும் அளவிற்கு உலகம் முழுவதும் அதிக வசூல் குவித்து வருகிறது.
அதன்படி டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்ட செய்தியின்படி விடாமுயற்சி 4 நாட்களில் ரூ.92 கோடி வசூல் குவித்திருக்கிறது. இந்தியாவில் மட்டும் ரூ.59.7 கோடி வசூல் குவித்திருந்த நிலையில் வெளிநாடுகளில் ரூ.32.3 கோடி வசூல் குவித்திருக்கிறது. தமிழக வசூல் நிலவரப்படி முதல் நாளில் ரூ.25.5 கோடியும், 2ஆவது நாளில் 9.85 கோடியும், 3ஆவது நாளில் ரூ.13.2 கோடியும், 4ஆவது நாளில் ரூ.11.73 கோடி வரையில் விடாமுயற்சி வசூல் குவித்திருக்கிறது. இதே போன்று தெலுங்கு சினிமாவில் விடாமுயற்சி ரூ.1.39 கோடி வரையில் வசூல் குவித்திருக்கிறது.
4ஆம் நாளில் தெலுங்கு சினிமாவில் ரூ.19 லட்சம் அள்ளியுள்ளது. அஜித் சினிமா வாழ்க்கையில் வெளியான படங்களில் விடாமுயற்சி பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. முதல் பாதியானது அஜித் மற்றும் த்ரிஷாவின் காம்பினேஷனில் மெதுவாகவே நகர்கிறது. அதுமட்டுமின்றி காதல் என்ற பெயரில் டயலாக்கும் ரொம்பவே மொக்கையாகவே இருக்கிறது. இதை எப்படி அஜித் ஏற்றுக் கொண்டார் என்று தான் தெரியவில்லை. மேலும், அஜித்தின் பலவிதமான தோற்றங்கள் பார்ப்பதற்கு சகிக்கவில்லை.
புஷ்பா 2 படத்தின் கேரளா தோல்விக்கு என்ன காரணம்? விளக்கம் கொடுத்த விநியோகஸ்தர்!
ஆனால், அஜித் மற்றும் த்ரிஷாவின் காட்சிகளை விட அர்ஜூன் மற்றும் ரெஜினாவின் காட்சிகள் படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளன. விடாமுயற்சி அஜித்திற்கான படம் இல்லை என்றும் அர்ஜூனுக்கான படம் என்றும் கூறப்படுகிறது. அந்தளவிற்கு அர்ஜூன் இந்தப் படத்தில் தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். விடாமுயற்சி படத்திற்கு பிறகு அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படமும் இந்த வருடமே திரைக்கு வர இருக்கிறது. வரும் மே 1 ஆம் தேதி தன்னுடைய 54ஆவது பிறந்தநாளை கொண்டாடும் அஜித்துக்கு டிரீட் கொடுக்கும் வகையில் இந்தப் படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நானி, விஜய் தேவரகொண்டா படங்களுக்கு டிமிக்கி கொடுத்து வரும் அனிருத், 4 படங்களின் நிலை என்ன?