சின்னத்திரையில் தொகுப்பாளியாக வலம் வந்த ஐஸ்வர்யா ராகேஷ் பின்னாளில் நடிகையாக மாறினார். "காக்கா முட்டை" படத்தின் மூலம் தமிழ் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
வழக்கமாக டூயட் பாடவே விரும்பும் ஹீரோயின்களுக்கு மத்தியில், இந்தப் படத்தில் இரு பிள்ளைகளுக்கு அம்மாவாக நடித்து ஆச்சரியப்படவைத்தார்.
தொடர்ந்து விக்ரம், தனுஷ், விஜய்சேதுபதி உள்ளிட்ட பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ்,மகளிர் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட "கனா" படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாகவே வாழ்ந்து விருதுகளையும், ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்றார்.
அதுமட்டுமல்லாமல்,சிவகார்த்தியேன் நடிப்பில் வெளியான எங்க வீட்டுப் பிள்ளை படத்தில் அவரது தங்கையாக நடித்து ஆச்சரியப்படுத்தினார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
ஐஸ்வர்யா ராஜேஷ் விஜய் சேதுபதியுடன் நடித்துள்ள கபெ ரணசிங்கம் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் ட்ரைலரில் ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியுள்ள அனல் பறக்கும் அரசியல் வசனங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
படங்களில் அதிக அளவில் கவர்ச்சி காட்டாமல் குடும்ப பெண்ணாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் விளம்பர போட்டோஷூட்களில் மட்டும் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து அசத்தி வருகிறார்.
இந்நிலையில் இவர், தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில்... பச்சை நிற லோ நெக் சுடிதார் அணிந்து, ரசிகர்களை கவரும் விதமாக சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இடுப்பில் கை வைத்து பார்பி பொம்மை போல இவர் கொடுத்துள்ள போஸ்... லைக்குகளை குவித்து வருகிறது.
ரசிகர்களை உசுப்பேற்றும் விதமாக... ஐஸ்வர்யா ராஜேஷ் கொடுத்த போஸ்.