சமீப காலமாக பிரபலங்கள் தங்களது ஓய்வு நாட்களை கழிப்பதற்காக, மாலத்தீவுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். தென்னிந்திய திரையுலகை சேர்ந்த பல நடிகைகள் அங்கு சென்று புகைப்படம் எடுத்து வெளியிட்டு வரும் நிலையில், தற்போது பிரபல நடிகை ஐஸ்வர்யாராய் தன்னுடைய கணவர் மற்றும் மகள் ஆராத்தியாவுடன் மாலத்தீவுக்கு பிறந்துள்ளார்.
பாலிவுட் திரையுலகின் நட்சத்திர ஜோடிகளான ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் இருவரும் நேற்று மும்பை விமான நிலையத்தில் காணப்பட்டனர். இந்த வார இறுதியை கழிப்பதற்காக அவர்கள் வெளிநாட்டுக்கு செல்வதாகவே கூறப்பட்டது.
மேலும் நவம்பர் 16ஆம் தேதி ஆராத்யாவின் 10வது பிறந்தநாள் வருவதால் அதனை ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் தம்பதி வெளிநாட்டில் கொண்டாட திட்டமிட்டதாகவும் தகவல் வெளியானது.
ஆனால் தற்போது ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகிய இருவரும் தங்களுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு புகைப்படம் மூலம், இவர்களது மாலத்தீவு ட்ரிப் குறித்து ரசிகர்களுக்கு தெரியவந்துள்ளது.
சில மணிநேரங்களுக்கு முன்பு, அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் இருவரும் மாலத்தீவில் கடற்கரை அழகை தங்களுடைய சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளனர்.
அவர்களது ஹோட்டல் அறைமுழுவதும் தென்னை மரங்களையும், கடற்கரையையும் பார்க்க முடிகிறது. கடற்கரை அருகிலேயே சில நாற்காலிகளும் போடப்பட்டுள்ளது. இந்த அற்புதமான பீச் வீயூ வை தான் இவர்கள் தங்களது புகைப்படத்தில் காட்டி பிரமிக்க வைத்துள்ளனர். இந்த புகைப்படங்கள் இரு தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.