'குளிக்கும்போது பாதியிலயே வந்தீங்களா?' - ட்ரோல்களுக்கு ஐஸ்வர்யா லட்சுமி நச் பதிலடி

Published : Mar 10, 2026, 02:11 PM IST

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு நடிகை ஐஸ்வர்யா லட்சுமி அணிந்து வந்த உடை பெரும் சர்ச்சையானது. அவரை, சோஷியல் மீடியாவில் பலரும் ட்ரோல் செய்தனர். இதற்கு தற்போது அவர் பதிலளித்துள்ளார்.

PREV
14
Aishwarya Lekshmi Dress Controversy

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, சமீபத்தில் தான் அணிந்திருந்த உடை குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ளார். அது ஒரு ஃபேஷன் தவறுதான் என்றும் அவர் கூறியுள்ளார். தமிழ் திரையுலகில் பிசியான நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா லட்சுமி, சமீபத்தில் ஒரு கடை திறப்பு விழாவுக்கு மஞ்சள் நிறத்தில் ஸ்ட்ராப்லெஸ், ஸ்லீவ்லெஸ் உடை அணிந்து வந்திருந்தார். இந்த உடை குறித்து சோஷியல் மீடியாவில் பெரும் விவாதம் எழுந்தது. தற்போது, ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் ஐஸ்வர்யா இதுகுறித்து மனம்திறந்து பேசியுள்ளார்.

24
ஐஸ்வர்யா லட்சுமி சொன்னது என்ன?

'அது ஒரு 'ஃபேஷன் மிஸ்ஜட்ஜ்மென்ட்' தான். நான் அப்போது ஒரு படப்பிடிப்பில் இருந்தேன். அந்த கதாபாத்திரத்திற்காக உடல் எடையை அதிகரித்திருந்தேன். ஸ்டன்ட் படப்பிடிப்பின்போது காயம் ஏற்பட்டு, முகம் மற்றும் கழுத்து பகுதி வீங்கியிருந்தது. ரொம்பவும் சோர்வாக இருந்தேன். அதற்கு நடுவில்தான் அந்த திறப்பு விழாவுக்கு போக வேண்டியிருந்தது. நான் அதற்காக கொஞ்சம் கூட தயாராகவில்லை. அந்த உடையை ட்ரையல் கூட பார்க்கவில்லை. அதன் ஃபிட்டிங்கும் சரியாக இல்லை. அது எனக்கே தெரிந்தது. இருந்து வேறுவழியில்லை. அதனால் அணிந்து வந்தேன்.

34
ஐஸ்வர்யா லட்சுமியின் கூல் பதில்

சிலர், 'பாதியில குளிக்கும்போது எழுந்து வந்தீங்களா?' என்றெல்லாம் கமென்ட் போட்டிருந்தார்கள். நிகழ்ச்சி முடிந்து வந்த பிறகு, நானே என் நண்பர்களிடம் இதைச் சொல்லி சிரித்தேன். உடை நன்றாக இல்லை என்று சொன்னதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. அது பரவாயில்லை. தவறு யாரிடம் வேண்டுமானாலும் நடக்கும் இல்லையா? தினமும் எல்லோரும் டிப்-டாப்பாக இருக்க முடியுமா? அன்று எனக்கும் அப்படியொரு நாள் அமைந்துவிட்டது, அவ்வளவுதான்' என்று ஐஸ்வர்யா கூலாக பதில் அளித்துள்ளார்.

44
ஐஸ்வர்யா லட்சுமி கைவசம் உள்ள படங்கள்

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தமிழ் மட்டுமின்றி மலையாளம் உள்ளிட்ட பிற மொழிகளிலும் நடித்து இருக்கிறார். தற்போது 'கட்டா குஸ்தி 2' உட்பட பல படங்களில் நடித்து வருகிறார். மலையாளத்தில் அவர் நடித்த 'ஆஷா' திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. இப்படத்தில் ஜோஜு ஜார்ஜ் மற்றும் ஊர்வசி ஆகியோரும் நடித்துள்ளனர். ஜஃபர் சனல் இப்படத்தை இயக்கியுள்ளார். கட்டா குஸ்தி 2 படத்தில் நடிகர் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் ஐஸ்வர்யா லட்சுமி. அப்படம் இந்த ஆண்டு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories