Published : Mar 10, 2026, 12:58 PM ISTUpdated : Mar 10, 2026, 01:03 PM IST
தமிழில் கோட், சிங்கப்பூர் சலூன் போன்ற படங்களில் நாயகியாக நடித்த மீனாட்சி செளத்ரி, தனக்கு வர உள்ள வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும் என சில கண்டிஷன்களை போட்டுள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் மீனாட்சி சௌத்ரி. இந்தியில் அறிமுகமாகி, இப்போது தமிழ், தெலுங்குப் படங்களில் ஹீரோயினாக கலக்கி வருகிறார். துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான 'லக்கி பாஸ்கர்' படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம், தமிழ் ரசிகர்களுக்கும் நன்கு பரீட்சையமானார். இதுதவிர கோட் திரைப்படத்திலும் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் மீனாட்சி. இந்நிலையில், சமீபத்தில் ஒரு பேட்டியில் தனக்கு வரப்போகும் கணவர் குறித்து மீனாட்சி ஜாலியாகப் பேசிய விஷயம், சோஷியல் மீடியாவில் செம வைரலாகி வருகிறது. பலரையும் இது ஆச்சரியப்படுத்தியுள்ளது.
24
மீனாட்சி செளத்ரி போட்ட கண்டிஷன்
அந்தப் பேட்டியில் மீனாட்சி, "என்னை கல்யாணம் பண்ணிக்கப்போற பையனுக்கு குறைஞ்சது 100 ஏக்கர் நிலமாவது சொந்தமா இருக்கணும். அதுமட்டுமில்லாம, நல்லா சமைக்கவும், துணி துவைக்கவும், அயர்ன் பண்ணவும் தெரிஞ்சிருக்கணும். வீட்டு வேலைகள் எல்லாத்தையும் பொறுப்பா பார்த்துக்கிற ஆளா இருக்கணும். சின்ன சின்ன வேலைகளுக்கு கூட அடுத்தவங்களை எதிர்பார்க்காம, அவரே எல்லாத்தையும் செய்யக்கூடியவரா இருக்கணும்," என்று கூறியுள்ளார்.
34
கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்
மீனாட்சியின் இந்த பேச்சைக் கேட்டு, நெட்டிசன்கள் பலரும் ஜாலியாக கமெண்ட்களைத் தெறிக்கவிட்டு வருகின்றனர். 'இதுக்கு வீட்டு வேலைக்கு ஒரு ஆளை வெச்சுக்கலாமே?', 'எல்லாம் சரி, ஆனா இந்த 100 ஏக்கர் எதுக்கு?', 'அவருக்கு 100 ஏக்கர் இருந்தா, அவர் எதுக்கு உங்க பின்னாடி வரணும்?', 'அப்போ உங்களுக்கு கணவர் தேவையில்லை, வீட்டு வேலைக்காரர்தான் வேணும் போல' என விதவிதமான கமெண்ட்கள் குவிந்து வருகின்றன. வீட்டு வேலைக்கு ஆள் தேவை இருக்காது, அதுக்காக தான் இப்படி ஒரு பிளானா என கிண்டலடித்து வருகிறார்கள்.
பொதுவாக நடிகைகள், தன்னுடன் சினிமாவில் நடிக்கும் நடிகர்களையோ, அல்லது தொழிலதிபர்களையோ திருமணம் செய்துகொள்ள முனைப்பு காட்டுவார்கள். ஆனால் மீனாட்சி செளத்ரி, தன்னுடைய வருங்கால கணவர், நன்கு வீட்டு வேலை செய்யத் தெரிந்தவராக இருக்க வேண்டும் என கூறி இருப்பது தற்போது சோசியல் மீடியாவில் ட்ரோல் மெட்டீரியல் ஆக மாறி உள்ளது. அவரின் இந்த கருத்தை நெட்டிசன்கள் மீம் போட்டு கலாய்த்து வருகின்றனர். அவர் நடிப்பில் கடைசியாக சங்கராந்திக்கு வஸ்துன்னாம் என்கிற தெலுங்கு படம் ரிலீஸ் ஆனது. அப்படம் பாக்ஸ் ஆபிஸில் 300 கோடிக்கு மேல் வசூல் அள்ளியது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.