Soori : வெற்றிமாறனின் ‘விடுதலை’ தந்த தெம்பு... மீண்டும் ஹீரோவாக களமிறங்கும் சூரி - யார் டைரக்‌ஷன்ல தெரியுமா?

Ganesh A   | Asianet News
Published : Jan 12, 2022, 07:15 AM IST

வெற்றிமாறனின் விடுதலை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி உள்ள சூரி, தற்போது மேலும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க கமிட் ஆகி உள்ளாராம்.

PREV
15
Soori : வெற்றிமாறனின் ‘விடுதலை’ தந்த தெம்பு... மீண்டும் ஹீரோவாக களமிறங்கும் சூரி - யார் டைரக்‌ஷன்ல தெரியுமா?

பிரபுதேவா நடிப்பில் வெளியான நினைவிருக்கும் வரை படத்தில் சிறு ரோலில் நடித்ததன் மூலம் திரையுலக பயணத்தை துவங்கிய சூரி, வெண்ணிலா கபடிக்குழு படத்தில் பரோட்டா பிரியராக நடித்ததன் மூலம் மிகவும் பேமஸ் ஆனார். இதை தொடர்ந்து பல படங்களில் சூரி தோன்றியிருந்தாலும் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் கோடி என்கிற கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்கள் மனத்தில் ஆழப்பதிந்து இருந்தார்.

25

இதன்தொடர்ச்சியாக சிவகார்த்தியேன் - சூரி கூட்டணியில் வெளியான ரஜினி முருகன், சீம ராஜா உள்ளிட்ட படங்கள் சூரியை நல்ல நகைச்சுவை நடிகனாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். விஜய், அஜித், சூர்யா, ரஜினி என அனைத்து டாப் ஹீரோக்களுடனும் நடித்துள்ள சூரி, தற்போது ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார்.

35

அதன்படி பொல்லாதவன்,  ஆடுகளம், விசாரணை,  வடசென்னை, அசுரன் என மாறுபட்ட கதை களத்தை கொடுத்த  வெற்றி மாறன் தற்போது நடிகர் சூரியை நாயனாக வைத்து ‘விடுதலை’ என்கிற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் கதையின் நாயகனாக நடித்து வரும் சூரி, போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

45

மேலும் விஜய் சேதுபதி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், இயக்குனர் கவுதம் மேனன் உள்ளிட்ட பிரபலங்களும் நடித்துள்ளனர். அதோடு ஜெய் பீம் படத்தில் கொடூர காவலராக தோன்றி மிரட்டியிருந்த தமிழ், இந்த படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்ததோடு காவலராகவும் நடித்துள்ளார். இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ நடித்துள்ளார். இப்படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன.

55

இந்நிலையில், நடிகர் சூரி மேலும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க கமிட் ஆகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பருத்திவீரன், மெளனம் பேசியதே, ஆதிபகவன், யோகி, ராம் உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமான அமீர் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் தான் சூரி கதாநாயகனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories