இயக்குனர் பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த பார்த்திபன் கடந்த 1989-ம் ஆண்டு வெளிவந்த புதிய பாதை படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதன்பின் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை அடுத்தடுத்து இயக்கி மக்கள் மனதில் இடம்பிடித்த இவர், சமீப காலமாக எடுக்கும் படங்களெல்லாம் உலகத்தரத்தில் இருக்கின்றன.