சித்திரம் பேசுதடி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மிஷ்கின். இதையடுத்து அஞ்சாதே, யுத்தம் செய், நந்தலாலா, பிசாசு, துப்பறிவாளன் என அடுத்தடுத்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானார் மிஷ்கின். இவர் இயக்கத்தில் தற்போது பிசாசு 2 திரைப்படம் தயாராகி உள்ளது. விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகி இருக்கும் இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.
24
இந்நிலையில், தற்போது மிஷ்கின் இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் செம்ம பிஸியாகிவிட்டாராம். இவர் ஏற்கனவே நந்தலாலா, சவரக்கத்தி போன்ற படங்களில் நடித்துள்ள நிலையில், தற்போது வில்லன் வேடங்களில் நடிக்க அவருக்கு அதிகளவில் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அந்த வகையில், முதலாவதாக சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் தான் இப்படத்தை இயக்குகிறார்.
இதையடுத்து இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான தளபதி விஜய்யின் லியோ படத்திலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார் மிஷ்கின். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்து வருகிறார் மிஷ்கின். இப்படத்தின் ஷூட்டிங்கும் காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இப்படத்தை வருகிற அக்டோபர் மாதம் 19-ந் தேதி ஆயுத பூஜை விடுமுறையில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளனர்.
44
இந்நிலையில், லியோ படத்துக்கு பின்னர் மிஷ்கினுக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறதாம். இதனால் படம் இயக்குவதை ஓரங்கட்டிவிட்டு, முழுநேர நடிகராக களமிறங்கிவிட்டாராம் மிஷ்கின். அதுமட்டுமின்றி தனக்கு உள்ள டிமாண்டை அறிந்துகொண்டு சம்பளத்தை சட்டென உயர்த்திவிட்டாராம் மிஷ்கின். அவரின் கால்ஷீட் கேட்டு வருபவர்களிடம் ஒரு நாளைக்கு ரூ.10 லட்சம் கேட்டு ஷாக் கொடுக்கிறாராம் மிஷ்கின்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.