நடிகர் - நடிகைகள் பொதுவாக தங்களுடைய பட பணிகளை முடிந்த கையேடு ஒரு வாரமாவது வெளிநாடுகளுக்கு சென்று தங்களுடைய வெகேஷனை கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
அந்த வகையில் சமீபத்தில் கூட, பூஜா ஹெக்டே, ஆண்ட்ரியா தங்களுடைய விடுமுறை நாட்களை கொண்டாடியதை தொடர்ந்து, தற்போது தமன்னா தன்னுடைய விடுமுறை நாட்களை கொண்டாடி மகிழ்ந்து வருகிறார்.
அந்த வகையில் எப்போதும் படு பிஸியான நடிகையாக வலம் வந்துகொண்டிருந்த நடிகை தமன்னா, தன்னுடைய ஓய்வு நாட்களை கொண்டாட, பெற்றோருடன் ஆன்மீக சுற்றுலா சென்றுள்ளார்.
அங்கு எடுக்கப்பட்ட விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து போட்டுள்ள பதிவில் வைஷ்ணோதேவி கோவிலில் இருப்பது ஒரு மாயாஜால உணர்வு என்றும் மிக அழகான தரிசனம் கிடைத்தது என்றும் தெரிவித்துள்ளார்.
ஒரு வருடம் முழுக்க படப்பிடிப்பு மற்றும் கடின உழைப்புக்குப் பிறகு இங்கு வந்திருப்பதால் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன், இது மிகவும் பாசிட்டிவான உணர்வு என தெரிவித்துள்ளார்.
இந்த ஆன்மீக யாத்திரைக்கு அவரது இந்தி ஆசிரியருக்கும் தன்னுடைய நண்பர்களுக்கும் நன்றி கூறியுள்ளார். இந்த புகைப்பங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
மன அழுத்தம் மற்றும் ஓய்வு நாட்களை கழிப்பதற்காக நடிகைகள் பலர் வெளிநாட்க்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்த நிலையில், தற்போது ஆன்மீக சுற்றுலாவுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். சமந்தாவை தொடர்ந்து இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இதோ...