இந்த பாடலுக்கு ஆடியே சில்க், அனுராதா, பபிதா, டிஸ்கோ சாந்தி என்று பல நடிகைகள் சினிமாவில் பரபரப்பானார்கள், ஓரளவு சம்பாதித்தார்கள். இந்த நடிகைகளை ஹீரோயின்களை விட பல படிகள் கீழே வைத்துதான் ட்ரீட் பண்ணுவது சினிமா துறையின் வழக்கம். ஹீரோயின்களும் பொது இடத்தில் கூட இந்நடிகைகளோடு பழக்கம் வைத்துக் கொள்ள மாட்டார்கள். காரணம் ‘ப்ரெஸ்டீஜாம்’.