அஜித் கைவிட்டாலும்... விக்னேஷ் சிவனை கைவிடாத ‘விஜய்’ நடிகர்..! விக்கியின் அடுத்த பட ஹீரோ இவரா?

First Published | Feb 17, 2023, 8:41 AM IST

அஜித் கைவிட்ட விக்னேஷ் சிவனுக்கு அவரது ஆஸ்தான ஹீரோவான விஜய் நடிகர் வாய்ப்பளித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சிம்புவால் அறிமுகம் செய்யப்பட்டு தமிழ் சினிமாவில் காலடி இயக்குனராக காலடி எடுத்து வைத்தவர் விக்னேஷ் சிவன். இவர்கள் கூட்டணியில் வெளியான போடா போடி திரைப்படம் பெரியளவில் வெற்றியடையாவிட்டாலும், ஓரளவு நல்ல வரவேற்பை பெற்ற படமாக அமைந்தது. இதற்கு அடுத்தபடியாக நானும் ரவுடி தான் என்கிற படத்தை இயக்கினார் விக்னேஷ் சிவன். இப்படம் தான் சினிமாவில் அவருக்கு ஒரு அடையாளமாக மாறியது.

விஜய் சேதுபதி - நயன்தாரா நடிப்பில் ரிலீசான நானும் ரவுடி தான் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது விக்னேஷ் சிவனை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது. இதன்பின் சூர்யாவை வைத்து விக்கி இயக்கிய தானா சேர்ந்த கூட்டம் திரைப்படம் தோல்வியடைந்ததால், சறுக்கலை சந்தித்த விக்கிக்கு மீண்டும் வாய்ப்பளித்தார் அவரின் ஆஸ்தான ஹீரோவான விஜய் சேதுபதி. இவர்கள் இருவரும் இரண்டாவது முறையாக இணைந்த திரைப்படம் தான் காத்துவாக்குல ரெண்டு காதல்.

இதையும் படியுங்கள்... உலகம் சுற்றும் வாலிபனாக வலம் வரும் அஜித் - வைரலாகும் ஏகே-வின் டூர் போட்டோஸ் மற்றும் வீடியோ

Tap to resize

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் வெற்றிக்கு பின்னர் விக்கிக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு தான் அஜித்தின் ஏகே 62. இப்படம் குறித்த அறிவிப்பும் கடந்த ஆண்டே வெளியானது. தற்போது ஷூட்டிங் தொடங்க இருந்த சமயத்தில் விக்னேஷ் சிவனை அப்படத்தில் இருந்து நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக மகிழ் திருமேனிக்கு வாய்ப்பளித்தார் அஜித். இதனால் விக்கியும் மனமுடைந்து போனார். இதையடுத்து தனது அடுத்த படத்திற்கான ஹீரோ தேடுதல் வேட்டையில் இறங்கினார் விக்கி.

அஜித் கைவிட்ட விக்னேஷ் சிவனுக்கு அவரது ஆஸ்தான ஹீரோவான விஜய் சேதுபதி தான் தற்போது வாய்ப்பளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி விக்னேஷ் சிவன் அடுத்ததாக இயக்க உள்ள படத்தில் மக்கள் செல்வன் தான் ஹீரோவாக நடிக்க உள்ளாராம். அவருக்கு ஆக்‌ஷன் கதை ஒன்றை சொல்லி விக்னேஷ் சிவன் ஓகே வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளியான 2 படமும் ஹிட் ஆனதால் தற்போது மூன்றாவது முறையாக இணைந்து ஹாட்ரிக் ஹிட் கொடுப்பார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்... 'பேக் ஆன் செட்ஸ்' மீண்டும் ஃபுல் ஃபார்மில் 'இந்தியன் 2' படப்பிடிப்பில் இயக்குனர் ஷங்கர்! வைரலாகும் புகைப்படம்

Latest Videos

click me!