Anshitha
விஜய் டிவியில் ஒளிபரப்பான செல்லம்மா சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் அன்ஷிதா. இவர் அந்த சீரியலில் நடிகர் அர்னவ்வுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்த சீரியலில் நடித்த போது இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்தன. இதில் அர்னவ் ஏற்கனவே திருமணமாகி அவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது. அவரது மனைவி திவ்யா ஸ்ரீதரும் ஒரு சீரியல் நடிகை தான். இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பால் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
Anshitha, Vishal
அர்னவ் உடனான காதல் சர்ச்சைக்கு மத்தியில் பிக் பாஸில் அர்னவ் உடன் எண்ட்ரி கொடுத்தார் அன்ஷிதா. பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் இருவரும் போட்டியாளராக கலந்துகொண்ட நிலையில், அர்னவ் இரண்டாவது வாரத்திலேயே எலிமினேட் ஆகி வெளியேறினார். அதன் பின்னர் அன்ஷிதாவுக்கு சக போட்டியாளரான விஷால் மீது கிரஷ் ஏற்பட்டது. அவர்கள் இருவரும் காதலிப்பதாகவும் பரவலாக பேசப்பட்டு வந்தது. ஆனால் அன்ஷிதா அதை திட்டவட்டமாக மறுத்தார்.
இதையும் படியுங்கள்... பிக் பாஸ் அல்டிமேட் சீசன் 2-வுக்கு ரெடியா? தொகுத்து வழங்கப்போவது யார்?
Anshitha in Jodi Are U Ready season 2
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்ததும் அன்ஷிதாவுக்கு மற்றுமொரு பிரம்மாண்ட வாய்ப்பை வழங்கி இருக்கிறது விஜய் டிவி. அதன்படி விரைவில் தொடங்க உள்ள ஜோடி ஆர் யூ ரெடி என்கிற நடன நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் அன்ஷிதா போட்டியாளராக களமிறங்கி உள்ளார். அந்நிகழ்ச்சி மூலம் தன்னுடைய நடன திறமையை காட்ட உள்ள அன்ஷிதாவுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. வருகிற ஞாயிறு முதல் ஜோடி ஆர் யூ ரெடி நிகழ்ச்சி ஆரம்பமாக உள்ளது.
Jodi Are U Ready season 2
இந்நிகழ்ச்சியை ரியோ மற்றும் ஏஞ்சலின் தொகுத்து வழங்க உள்ளனர். இந்நிகழ்ச்சியின் முதல் சீசனில் சாண்டி மாஸ்டர், மீனா மற்றும் ஸ்ரீதேவி ஆகியோர் நடுவர்களாக இருந்த நிலையில், இந்த சீசனில் மீனாவுக்கு பதில் நடிகை ரம்பா நடுவராக களமிறங்கி இருக்கிறார். மேலும் ஸ்ரீதேவி மற்றும் சாண்டி மாஸ்டர் வழக்கம் போல் நடுவர்களாக தொடர்கின்றனர். பிக் பாஸ் முடிந்த சோகத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு விருந்தாக இந்த ஜோடி ஆர் யூ ரெடி நிகழ்ச்சி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... அர்ச்சனாவுக்கு பரிசை அள்ளி கொடுத்த பிக் பாஸ்; முத்துக்குமரனுக்கு கிள்ளி கொடுத்தது ஏன்?