கோலிவுட் திரையுலகில் சூப்பர் ஸ்டார் என்கிற சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் ரஜினிகாந்துக்கு, உலக அளவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 74 வயதிலும் தன்னுடைய தனித்துவமான ஸ்டைல், மற்றும் துள்ளலான நடிப்பால் ரசிகர்களை வசீகரித்து வரும் ரஜினிகாந்த், தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'கூலி' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம், கோல்டு ஸ்மக்லிங்கை மய்யமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது .
25
Jailer 2 Latest update
பான் இந்தியா படமாக உருவாகும் இந்த படத்தில், ரஜினிகாந்துடன் இணைந்து தெலுங்கு திரையுலக சூப்பர் ஸ்டார் நாகர்ஜுனா, கன்னட சூப்பர் ஸ்டார் உப்பேந்திரா, மலையாள நடிகர் சொப்பின் ஷாகீர், சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், ரெபா மோனிகா ஜான், ஜூனியர் எம்.ஜி.ஆர்.உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பாலிவுட் நடிகர் அமீர் கான் இந்த கேமியோ ரோலில் நடிக்கிறார். மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தை சன் பிச்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கிறார்.
இந்த படத்தில் நடித்து முடித்த பின்னர், இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், உருவாக உள்ள 'ஜெயிலர் 2' திரைப்படத்தில் ரஜினிகாந்த் இணைய உள்ளார். இந்த படத்தில் ப்ரீ புரோடக்ஷன் பணிகளில் நெல்சன் திலீப் குமார் ஈடுபட்டு வருகிறார். கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியான ஜெயிலர் திரைப்படத்தின் முதல் பாகம் உலக அளவில் சுமார் 650 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது. விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றதால் தற்போது இந்த படத்தின் 2-ஆம் பாகம் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
45
Rajinikanths Jailer
'ஜெயிலர்' படத்தின் முதல் பாகத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக, ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார். இவருக்கு மகனாக வசந்த் ரவி நடிக்க, மிர்னா இவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் மலையாள நடிகர் விநாயகன் வில்லனாக நடித்திருந்தார். மேலும் தமன்னா, யோகி பாபு, சுனில், உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். குறிப்பாக மோகன்லால், சிவ ராஜ்குமார் மற்றும் ஜாக்கி ஷெராஃப் போன்ற நடிகர்கள் கேமியோ ரோல்களில் நடித்திருந்தனர்.
முதல் பாகத்தில் நடித்த நடிகர்கள் இரண்டாம் பாகத்தில் நடிக்க வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது. ஆனால் கதைக்கு ஏற்ற போல் சில நடிகர்கள் மாற்றம் நடைபெறும் என தெரிகிறது. மோகன் லால் மற்றும் சிவ ராஜ்குமார் ரோலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் இந்த படம் குறித்த முக்கிய அப்டேட் ஒன்று சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது. நடிகர் சிவராஜ் குமார் கடந்த 2 மாதங்களாக கேன்சர் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சையில் உள்ளார். எனவே அவர் 'ஜெயிலர் 2' படத்தில் அவருக்கு பதிலாக, பிரபல தெலுங்கு மாஸ் நடிகரான பாலகிருஷ்ணாவை நடிக்க வைக்க நெல்சன் திலீப் குமார் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான பேச்சு வார்த்தை தற்போது நடந்து வருவதாக சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.