நம்மலும் காமெடியனாவே இருக்க முடியாதுல; 3 கதை எழுதி வச்சிருக்கும் யோகி பாபு!

First Published | Jan 22, 2025, 10:49 AM IST

Yogi Babu has written 3 scripts for Make a movie : காமெடியனாகவே சினிமாவில் நடித்து வந்த யோகி பாபு இப்போது 3 கதைகள் எழுதி வைத்திருப்பதாக அவரே ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்.

Actor Yogi Babu

Yogi Babu has written 3 scripts for Make a movie : காலம் மாறிக் கொண்டே இருக்கும் போது ஒன்றை மட்டுமே வைத்துக் கொண்டு நீண்ட நாட்கள் வண்டிய ஓட்ட முடியாது. நிறைய விஷயங்கள் கற்று தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்பது இப்போது அவசியமான ஒன்றாகிவிட்டது. சினிமாவை எடுத்துக் கொண்டால் ஒருவர் நடிகராக மட்டுமே இருந்துவிட முடியாது அல்லவா. சினிமாவின் நுணுக்கத்தைப் பற்றி முதலில் தெரிந்து கொண்டு அதன் பிறகு இயக்குநர், பாடலாசிரியர், பின்னணி பாடகர், கதை, டயலாக் ரைட்டர் என்று எல்லாவற்றையும் கற்றுக் கொள்ள வேண்டும்.

Yogi Babu Filmography

முதலில் நடிகர் தனுஷ் நடிகராக மட்டும் பல படங்களில் நடித்து வந்தார். அதன் பிறகு பாடலாசிரியர், பின்னணி பாடகர், இயக்குநர், தயாரிப்பாளர் என்று அவதாரம் எடுத்தார். இதே போன்று நடிகர் சிவகார்த்திகேயன் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து நடிகராக மாறினார். அதன் பிறகு தயாரிப்பாளர், பின்னணி பாடகர், பாடலாசிரியர் என்று அவதாரம் எடுத்தார். இப்படி தமிழ் சினிமாவில் எத்தனையோ ஜாம்பவான்கள் இருக்கும் நிலையில் காமெடி நடிகர் யோகி பாபுவும் அடுத்தடுத்த அவதாரம் எடுக்க தொடங்கிவிட்டார். முதல் கட்டமாக கதை எழுதி வைத்திருக்கிறார். ஆனால், அந்த கதையில் அவர் மட்டுமே நடிக்க செய்வாராம். படம் இயக்குவதை மட்டும் வேறொரு இயக்குநரிடம் கொடுத்துவிடுவாராம்.


Yogi Babu and Ravi Mohan Movies

சமீபத்தில் காதலிக்க நேரமில்லை படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், படத்தோட இயக்குநர் கிருத்திகா உதயநிதி, ரவி மோகன், நித்யா மேனன், யோகி பாபு ஆகியோர் உள்பட பலரும் கலந்து கொண்டு படத்தை பற்றி ஜாலியாக பேசினர். அதில், நித்யா மேனன், யோகி பாபு உடன் இணைந்து இயக்குநர் பாண்டியராஜன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துள்ளதாக கூறினார். அதோடு யார்ரா அந்த பையன் என்ற டயலாக்கை சொல்ல, யோகி பாபுவோ நான் தான் அந்த பையன் என்றார். இதற்கு எல்லோரும் சிரித்தனர்.

Yogi Babu Make 3 Script

இதையடுத்து பேசிய யோகி பாபு, நான் 3 கதை எழுதி வைத்திருக்கிறேன். நம்மளும் அப்படியே இருக்க முடியாது அல்லவா. 2 கதை ரவி மோகனிடம் சொல்லியிருக்கிறேன். ஸ்கிரிப்ட் மட்டும் தான் நான். மற்றபடி இயக்கத்தை எல்லாம் ஒரு இயக்குநரிடம் கொடுத்துவிட வேண்டும் என்று பேசியுள்ளார். இனி யோகி பாபுவை காமெடி நடிகர் மட்டுமல்லாமல் அடுத்தடுத்த லெவலில் பார்க்கலாம். யோகி பாபுவின் 2 கதையில் ரவி மோகன் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அந்த 2 கதையையும் அவரிடம் சொல்லிருக்கிறார். கதையும் நன்றாக இருக்கிறது என்று ரவி மோகனும் சர்டிஃபிகேட் கொடுத்திருக்கிறார். இதைத் தொடர்ந்து அடுத்து இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் கிடைத்துவிட்டால் கதைக்கு உயிரி கொடுத்துவிடுவார்கள் என்று தெரிகிறது.

Latest Videos

click me!