‘மாநகரம்’ படம் மூலம் திரையுலகை தன்பால் திரும்பி பார்க்க வைத்த லோகேஷ் கனராஜுக்கு ‘கைதி’ திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதற்கு அடித்த ஜாக்பாட்டாக தான் தளபதி விஜய் - மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முதல் முறையாக எதிரும் புதிருமாக களமிறங்கும்‘மாஸ்டர்’ படத்தை இயக்கி முடித்துள்ளார்.
தற்போது உலக நாயகன் கமல் ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்குவதற்கான தீவிர பணிகளை மேற்கொண்டு வருகிறார். தற்போது அந்த படத்திற்கான ப்ரீ புரோடக்ஷன் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறதாம்.
இந்த படத்தில் நடிக்க இருக்கும் மற்றொரு நடிகர் குறித்து கசிந்துள்ள தகவல் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது. 1998-ம் கமல் ஹாசன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் 'காதலா காதலா'. இதில் கமல் அளவிற்கு அசத்தலான காமெடி கேரக்டரில் நடித்திருப்பார் பிரபுதேவா.
திக்கு வாய் கேரக்டரில் பின்னிபெடலெடுத்த பிரபுதேவாவை யாரும் மறந்திருக்க முடியாது. தற்போது 22 வருடங்களுக்குப் பிறகு விக்ரம் படம் மூலமாக கமல் - பிரபுதேவா ஜோடி ஒன்றிணைய உள்ளதாம்.
விக்ரம் படத்தின் ஷூட்டிங் பிப்ரவரி மாதம் சென்னையில் தொடங்கி மே அல்லது ஜூன் மாதத்தில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் செப்டம்பரில் படத்தை திரையிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.