தமிழ் சினிமாவில் காதலை அழகாக வர்ணிக்க ஆயிரம் படங்கள் இருந்தாலும் அதன் வலிகளை உணர்வு பூர்வமாக விவரிக்க சில படங்கள் மட்டுமே உள்ளன. அதில் இந்த கால இளைஞர்களால் மிகவும் ரசிக்கப்பட்டது என்றால் அது “காதல்” படம் தான்.
பள்ளிப்பருவ காதலை மிகவும் அழகாகவும் வசீகரமாகவும் சொல்லி அதன் வலியையும் அருமையாக கூற பாலாஜி சக்தி வேலால் மட்டுமே சாத்தியமானது. டீன் ஏஜ் பருவ மாணவிக்கு அழகானவர்கள் மீது தான் ஈர்ப்பு வரும் என்றில்லை, உண்மை காதல் அழுக்கான ஒருவனை பார்க்கும் போதும் உதிக்கும் என காட்டியிருப்பார்.
இந்த படம் தான் சந்தியா மற்றும் பரத்தின் திரைப்பயணத்திலேயே முக்கியமானதாக அமைந்தது. குறிப்பாக இதில் நடித்த பிறகு சந்தியா பல படங்களில் நடித்திருந்தாலும் இன்று வரை அவரை ரசிகர்கள் காதல் சந்தியா என்று தான் அழைக்கிறார்கள்.
தமிழில் சில படங்களில் நடித்திருந்தாலும் பரத்திற்கு காதல் திரைப்படம் சிறந்த நடிகர் என்ற பெயரைப் பெற்று தந்தது. கிளைமேக்ஸ் காட்சியில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞராக சாலையில் சுற்றித்திரியும் பரத் கதாபாத்திரத்தை யாராலும் எளிதில் மறந்துவிட முடியாது.
2004ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் வசூல் ரீதியாக மட்டுமல்லாது விமர்சன ரீதியாகவும் பல தரப்பினர் இடையே வரவேற்பு பெற்றது.
தற்போது கிட்டதட்ட 16 வருடங்களுக்குப் பிறகு சந்தியாவும், பரத்தும் ஒன்றாக எடுத்துக் கொண்டு செல்ஃபி புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வருகிறது.
டீன் ஏஜ் பருவத்தில் பார்த்ததை விட இருவரும் 16 ஆண்டுகளுக்குப் பிறகு அழகு மற்றும் ஸ்டைலில் செமையாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.