ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 10-ந் தேதி திரைக்கு வந்தது. அப்படம் ரிலீஸ் ஆனதால் அன்றைய தினம் வேறு எந்த தமிழ் படமும் ரிலீஸ் ஆகவில்லை. அப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்ததன் காரணமாக கடந்த வாரம் தமிழ் படங்கள் எதுவும் வெளியிடப்படாமல் இருந்தது. இந்த நிலையில், வருகிற ஆகஸ்ட் 25-ந் தேதி முதல் ஏராளமான தமிழ் படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன. அதன் தொகுப்பை பார்க்கலாம்.
கிங் ஆஃப் கொத்தா
துல்கர் சல்மான் நடித்துள்ள பான் இந்தியா திரைப்படம் தான் கிங் ஆஃப் கொத்தா. அபிலாஷ் ஜோஷி இயக்கியுள்ள இப்படம் வருகிற ஆகஸ்ட் 24-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் துல்கருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். மேலும் ரித்திகா சிங் ஐட்டம் சாங்கிற்கு கவர்ச்சி நடனம் ஆடி இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... கவின் பொண்டாட்டி நானு... சூசக பதிவால் லாஸ்லியாவை சீண்டினாரா மோனிகா டேவிட்?
அடியே
ஜிவி பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் தான் அடியே. விக்னேஷ் கார்த்திக் இயக்கியுள்ள இப்படம் வருகிற ஆகஸ்ட் 25-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக கவுரி கிஷான் நடித்துள்ளார். இப்படத்தில் வெங்கட் பிரபுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
பாட்னர்
மனோஜ் தாமோதரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் பாட்னர். ஆதி நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஹன்சிகா மோத்வானி நடித்துள்ளார். நகைச்சுவை நடிகர் யோகிபாபுவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படமும் ஆகஸ்ட் 25-ந் தேதி திரைக்கு வருகிறது.