அஜித்தை பார்க்கும் ஒவ்வொரு நாளும் எனக்கு ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ தான் – ஆதிக் ரவிச்சந்திரன்!

Published : Apr 01, 2025, 03:27 PM ISTUpdated : Apr 01, 2025, 03:28 PM IST

Good Bad Ugly": Adhik Ravichandran praises Ajith Kumar's performance! அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் குட் பேட் அக்லீ படம் வரும் 10ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அஜித்துடன் பணியாற்றிய அனுபவம் மற்றும் அவரைப் பற்றி இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் பாராட்டி பேசியுள்ளார்.

PREV
18
அஜித்தை பார்க்கும் ஒவ்வொரு நாளும் எனக்கு ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ தான் – ஆதிக் ரவிச்சந்திரன்!

Good Bad Ugly": Adhik Ravichandran praises Ajith Kumar's performance! அஜித் குமார் நடித்துள்ள குட் பேட் அக்லீ படம் வரும் 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அஜித்தின் தீவிர ரசிகரான இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் ஒரு ரசிகனாக அஜித்தை திரையில் எப்படி பார்க்க ஆசைப்பட்டாரோ அதே போன்று தான் ஒரு இயக்குநராக அவரை குட் பேட் அக்லீ படத்தில் காட்டியிருக்கிறார். ஒரு ரசிகனாகத்தான் நடிகரை ரசிக்க முடியும் என்பதை ஆதிக் இந்தப் படத்தில் காட்டியிருக்கிறார்.

28
Ajith Kumar Good Bad Ugly

இந்தப் படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, பிரபு, பிரசன்னா, அர்ஜூன் தாஸ், சுனில், ராகுல் தேவ், யோகி பாபு ஆகியோர் பலர் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். அஜித் மற்றும் ஜிவி இருவரும் இதற்கு முன்னதாக கிரிடம் படத்தில் இணைந்து நடித்திருந்தனர். ரூ.270 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் முதல் 2 சிங்கிள் டிராக் வெளியாகியிருக்கிறது.

38
Good Bad Ugly Movie

இதில் ஓஜி சம்பவம் மற்றும் God Bless U ஆகிய பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளன. ஏற்கனவே குட் பேட் அக்லீ படத்தின் டீசரும் வெளியாகி 24 மணிநேரத்தில் 32 மில்லியன் வியூஸ் பெற்று சாதனை படைத்துள்ளது. படத்தை வெளியிடுவதற்கான தமிழ்நாடு மற்றும் கேரளா விநியோக உரிமையை ரோமியோ பிக்ஸர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

48
Good Bad Ugly April 10 Release

கர்நாடகா உரிமையை கேவிஎன் புரோடக்சன்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. பிரதியங்கிரா சினிமாஸ் நிறுவனம் அமெரிக்கா உரிமையை கைப்பற்றியிருக்கிறது. திரையரங்கிற்கு பிறகு ஓடிடியில் வெளியாகும் உரிமையை ரூ.95 கோடிக்கு நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

58
Good Bad Ugly OTT Release

ஆக்‌ஷன் காமெடி கதையை மையப்படுத்திய இந்தப் படத்தில் அஜித் பல கெட்டப்புகளில் வந்து ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கிறார். 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக குட் பேட் அக்லீ படம் திகழ்கிறது. அதுமட்டுமின்றி படம் மீதான எதிர்பார்ப்பிலேயே ரசிகர்களை வைத்திருக்கும் வகையில் நாள்தோறும் குட் பேட் அக்லீ படம் தொடர்பாக அப்டேட்டுகள் வெளியாகி வருகிறது.

68
Tamil Cinema, Good Bad Ugly Distribution Rights

இந்த நிலையில் தான் குட் பேட் அக்லீ படத்திற்கு பிறகு இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தைப் பாராட்டி பேசியுள்ளார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஆதிக் ரவிச்சந்திரன் தொகுப்பாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அடுத்தடுத்து பதிலளித்தார். அப்போது பேசிய அவர், தனது வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியவர் அஜித் தான். அவருடன் நான் பணியாற்றியது எனது வாழ்க்கையில் நான் செய்த பாக்கியம்.

78
Ajith Kumar, Asianet News Tamil, Cinema News Tamil

அவருடைய படங்களுக்கு நான் பேனர் வைத்திருக்கிறேன், போஸ்டர் அடித்திருக்கிறேன். மிகவும் எளிமையானவர், யாரைப் பற்றியும் எந்த குறையும் சொல்லமாட்டார். அவரிடமிருந்து நிறைய விஷயங்களை நாம் கற்றுக் கொள்ளலாம். நேர்கொண்ட பார்வை படத்தை பார்த்து கற்றுக் கொண்டு தான் நான் மார்க் ஆண்டனி படம் இயக்கினேன். மார்க் ஆண்டனி படம் உருவாகவும் அவர் ஒரு முக்கிய காரணம்.

88
Good Bad Ugly, Ajith Good Bad Ugly

குட் பேட் அக்லீ படத்தின் ஒவ்வொரு காட்சியையும் ரசிக்கும்படியாகவே நாங்கள் படமாக்கியிருக்கிறோம். இது ஒரு சிறந்த பொழுதுபோக்கு படம். எமோஷனல் காட்சிகள் படத்தில் இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார். மேலும், இந்தப் படத்தை இயக்கும் போது எனக்கு ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ பார்த்த அனுபவம் தான் கிடைத்தது. அப்படித்தான் எனக்கு அஜித்தை ஒவ்வொரு முறை பார்த்த அந்த 100 நாட்களும் கிடைத்தது என்று பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories