கொரோனா அச்சுறுத்தலுக்கு நடுவே... புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவும் பிரபல நடிகை!

First Published Jun 5, 2020, 4:38 PM IST

புலம்பெயர் தொழிலாளர்களுக்காக பிரபல நடிகை வரலட்சுமி தனது தாயாருடன் இணைந்து சமூக சேவை செய்து வருகிறார். 
 

நடிகை வரலட்சுமி நடிகை என்பதை தாண்டி, தன்னால் முடிந்த வரை சமூக பிரச்சனைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
undefined
மீடூ பிரச்சனை துவங்கிய போது, திரையுலகில் உள்ள பெண்கள் எந்த ஒரு விதத்திலும் பாதிக்க பட கூடாது என்பதற்காக 'சக்தி' என்கிற அமைப்பை முன்னின்று நடத்தி வருகிறார்.
undefined
ஆரம்ப காலங்களில் இவர் நடிக்க வந்த போது, பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தாலும், தற்போது தன்னுடைய திறமையை நிரூபித்து கை வசம் அரை டஜன் படங்களுக்கு மேல் வைத்துள்ளார்.
undefined
தன்னுடைய அம்மாவுடன் வசித்து வரும் வரலட்சுமி அவருடன் இணைந்து இந்த கொரோனா ஊரடங்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு சமூக சேவையை செய்து வருகிறார்.
undefined
கொரோனா ஊரடங்கால், பசி பட்டினியோடு வெளியில் சுற்றி திரிந்த நாய்களுக்கு தினமும் உணவு வைத்து வருகிறார்.
undefined
இது மட்டும் இன்றி, ரயில் மூலம் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு செல்லும், புலம் பெயர் தொழிலாளர்களுக்கு, ரொட்டி பாக்கெட்டுகளை வழங்கி வருகிறார்.
undefined
கையில் கையுறையுடன், மாஸ்க் அணிந்தவாறு வரலட்சுமியுடைய அம்மா, ரயில் பெட்டி அருகே அவசர அவசரமாக வேலை செய்யும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
undefined
20 பெட்டிகளில் தலா ஒரு பெட்டிக்கு எண்பது பேர் என இருக்கக்கூடியவர்களுக்கு ரொட்டி பாக்கெட்டுகளை தனது தாயாருடன் சேர்ந்து அவர் அளிக்கிறார் வரலட்சுமி.
undefined
கொரோனா நேரத்தில் பலரும் தங்கள் வீடுகளை விட்டே வெளியேற பயப்படும் வேளையில் யாருமே இல்லாமல் வெறிச்சோடி இருக்கும் ரயில் நிலையத்தில் இவர்கள் தற்போது மக்களுக்காக சேவை செய்து வருகிறார்கள்.
undefined
முகத்தில் மாஸ்க் அணிந்து சமூக சேவையில் இறங்கியிருக்கும் நடிகை வரலட்சுமி மற்றும் அவருடைய தாயார் சாய அவர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.
undefined
click me!